நமக்கு பிடித்த வீரர்கள் வயதான பின் எப்படி இருப்பார்கள்?

கிரிக்கெட் வீரர்கள் வயதானப் பிறகு எப்படி இருப்பார்கள்? இந்த கேள்விக்கான பதில் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Jul 17, 2019, 10:01 AM IST
நமக்கு பிடித்த வீரர்கள் வயதான பின் எப்படி இருப்பார்கள்? title=

கிரிக்கெட் வீரர்கள் வயதானப் பிறகு எப்படி இருப்பார்கள்? இந்த கேள்விக்கான பதில் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் சமீபத்தில் டென் (10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், வாக்குவம் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் மற்றும் பாட்டில் கேப் சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வந்தது. 

இந்த வரிசையில் தற்போது வைரலாகி வரும் ட்ரண்டுகள்., ஒன்று புடைவை ட்விட்டர், மற்றொன்று ஓல்ட்vsயெங்க் சவால். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படங்களில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய வீரர்களான டோனி, ஜடேஜா, விராட் கோலி, தினேஷ் கார்த்தி, புவனேஷ் குமார் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மிகவும் தத்ரூபமாக எடிட் செய்யப்பட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தொகுப்பு உங்கள் பார்வைக்கு., 

Trending News