Scotland அரசு அந்நாட்டு பெண்களுக்கு அளித்துள்ள மிகப்பெரிய பரிசு: Free Sanitary Pads

தொற்றுநோய் காலத்தில் மாதவிடாய் வராமல் இருக்காது. இப்படிப்பட்ட காலங்களில்தான் இந்த பொருட்களின் அணுகலை இன்னும் எளிதாக்குவது அவசியமாகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2020, 04:23 PM IST
  • மாதவிடாய் காலங்களில் தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வழங்கும் முதல் நாடானது ஸ்காட்லாந்து.
  • இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • ஸ்காட்லாந்துக்கு ட்விட்டரில் மக்கள் பாராட்டு மழை.
Scotland அரசு அந்நாட்டு பெண்களுக்கு அளித்துள்ள மிகப்பெரிய பரிசு: Free Sanitary Pads  title=

பெண்களின் மாதவிடாய் காலங்களில் உதவுவதற்கான ஒர் மிகப் பெரிய நடவடிக்கையில், ஸ்காட்லாந்து, மாதவிடாய் காலங்களில் தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாகக் கிடைக்கச் செய்யும் உலகின் முதல் நாடாக மாறியுள்ளது.

ஸ்காட்லாந்து பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் பொருட்களை இலவசமாக வழங்குவதற்கான மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றியது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள இவற்றிற்கான கடைகளில் சேனிடரி நேப்கின்கள் (Sanitary Napkin) மற்றும் டேம்பூன்கள், தேவைப்படும் பெண்களுக்கு இலவசமாகக் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

இந்த மசோதாவின் கீழ், ஸ்காட்லாந்து அரசாங்கம் ஒரு நாடு தழுவிய திட்டத்தை அமைக்க வேண்டும். மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் பொருட்களை இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். CNN-ன் படி, 2022 ஆம் ஆண்டில் ஆண்டுக்குள் இதற்கு சுமார் 7 8.7 மில்லியன் யூரோ செலவாகும். எனினும் இது இலவச பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைப் பொறுத்து என்று இந்த மசோதாவின் நிதி குறிப்பு மதிப்பிடுகிறது.

இந்த மசோதாவை ஸ்காட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா லெனான் அறிமுகப்படுத்தினார். அவர் 2016 முதல் மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் பொருட்களில் உள்ள தட்டுப்பாடை முடிவுக்குக் கொண்டுவருவதாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

மசோதாவிற்கு வாக்களித்த பின்னர், இந்த முடிவு " மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் பொருட்களுக்கான இலவச உலகளாவிய அணுகலை அடைய முடியும் என்பதற்கான ஒரு சமிக்ஞை" என்று லெனான் கூறினார்.

"தொற்றுநோய் (Pandemic) காலத்தில் மாதவிடாய் வராமல் இருக்காது. இப்படிப்பட்ட காலங்களில்தான் இந்த பொருட்களின் அணுகலை இன்னும் எளிதாக்குவது அவசியமாகிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்காட்லாந்து (Scotland) அமைச்சரான நிக்கோலா ஸ்டர்ஜன் செவ்வாய்க்கிழமை மாலை இந்த மசோதாவுக்கு வாக்களித்த சிறிது நேரத்திலேயே ட்விட்டரில், "இந்த அற்புதமான சட்டத்திற்கு வாக்களித்ததில் பெருமிதம் கொள்கிறேன்" என்று எழுதியதோடு மோனிகா லெனனை வாழ்த்தினார்.

"இந்த அற்புதமான சட்டத்திற்கு வாக்களிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் பொருட்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக ஸ்காட்லாந்து ஆகியுள்ளது. இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான முக்கியமான கொள்கையாகும்” என்று ஸ்காட்லாந்தின் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் எழுதினார்.

குறைந்த வருமானம் உள்ளவர்கள் மாதவிடாய் காலங்களில் தேவைப்படும் பொருட்களை வாங்க முடியாத நிலைமையை ‘Period Poverty’ என்று கூறுவது வழக்கம். ஸ்காட்லாந்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பதிலளித்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் மாதவிடாய் (Menstruation) காலங்களில் தேவைப்படும் பொருட்களை அணுக போராடியதாக யங் ஸ்காட் நடத்திய 2,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ட்விட்டர் பயனர்கள் இந்த செய்தியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததுடன், இந்த விஷயத்தில் ஒரு முன்னோடியாக இருந்ததற்கு அந்த நாட்டை பாராட்டினார்கள். 

Trending News