Viral Video: தலைக்கு தில்ல பாத்தியா... முயலிடம் சிக்கி அவதிப்படும் பாம்பு...

தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பாம்பின் வீடியோ தான் என்றாலும், இது பயங்கரமான வீடியோ அல்ல.  உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் காமெடி வீடியோ.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 25, 2024, 01:41 PM IST
  • இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ.
  • சாலையில் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்கிறது.
  • பாம்பின் சக்தியை உணர்ந்திராத முயல் அதன் துரத்தி துரத்தி சீண்டுகிறது.
Viral Video: தலைக்கு தில்ல பாத்தியா... முயலிடம் சிக்கி அவதிப்படும் பாம்பு... title=

இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் பேராதரவைப் பெற்று மிகவும் வைரலாகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், பாம்பு வீடியோக்களுக்கு தான் இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

அன்றாட வாழ்வில் நேரில் பார்க்க முடியாத காட்சிகளை  காண மக்கள் மத்தியில் எப்போதுமே ஆர்வம் அதிகம் இருக்கும். அதனால், தான் விலங்குகளின் வாழ்க்கையை விவரிக்கும் வீயோக்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பாம்பின் வீடியோ (Snake Video) தான் என்றாலும், இது பயங்கரமான வீடியோ அல்ல.  உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் காமெடி வீடியோ. 

நகரம் போல் காட்சி அளிக்கும் ஒரு இடத்தில், சலையில் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்கிறது. அதே சமயம் அதனை ஒரு முயல் ஒன்று பாடாய் படுத்துகிறது. பாம்பின் சக்தியை ஆற்றலையும் நினைத்து பயன்படாத அல்லது அதை உணர்ந்திராத அந்த முயல் அதன் துரத்தி துரத்தி சீண்டுகிறது. இது மிகவும் ஆச்சர்யமான காட்சி தான். இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

 

மேலும் படிக்க | வீட்டுக்குள் நுழைந்த நாகப்பாம்பை பின்னி பெடலெடுத்த நாய்: ஷாக் ஆகாம பாருங்க.. வைரல் வீடியோ

சமீபத்தில் வைரலான பாம்பு வீடியோ

தலைநகர் தில்லிக்கு அருகில் உள்ள மிக பிரபலமான நொய்டா அமிட்டி பலகலைகழகத்தில், வகுப்பறை ஒன்றில் உள்ள ஏர் கண்டிஷனிங் வென்ட் வழியாக பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக வகுப்பறைக்குள் நுழைந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பாம்பைக் கண்ட மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினர். கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி நேரத்தில் நடந்த இந்த சம்பவம் ஆசிரியர்களையும் மாணவர்களையும் பதற செய்தது. சுமார் 13 வினாடிகள் கொண்ட வீடியோ மிகவும் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவை கீழே  உள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: வகுப்பில் பாடம் படிக்க வந்த பாம்பு.... அலறி அடித்துக் கொண்டு ஓடிய மாணவர்கள்...

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நாகப்பாம்பை மாலையாய் போட்ட குரங்கு: ஷாக் ஆன மற்றொரு பாம்பு... வேற லெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News