நாள் ஒன்றுக்கு எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை. கார்ப்பரேட் கம்பெனிகளில் இந்த ரிலாக்ஸ் என்பதே பலருக்கு கிடைப்பதில்லை. அங்கு ஊழியர்களின் ரிலாக்ஸூக்காகவே அவுட்டிங் கூட்டிச் செல்வது, கம்பெனிகளில் விளையாட்டு போட்டி ஏற்பாடு செய்வது, படத்துக்கு அழைத்துச் செல்வது போன்றதை செய்வார்கள். ஆனால் தினக்கூலிகளுக்கு அதுவும் இல்லை. நாள் முழுவதும் உழைப்பது, வீட்டுக்கு செல்வது, திரும்ப வேலைக்கு வருவது என அதே வாழ்க்கை முறையிலேயே இருப்பார்கள்.
மேலும் படிக்க | டீச்சரம்மாவின் நாய்னா சும்மாவா? படிச்சு அப்படியே செய்யும் நாயின் வைரல் வீடியோ
தங்களுக்கு என ஒரு ரிலாக்ஸ் டைம் கூட ஒதுக்கிக் கொள்ள மாட்டார்கள். அப்படி என்றால் என்ன? என கேட்கும் தினக்கூலிகள் தான் இங்கு அதிகம். சோஷியல் மீடியா பிரபலமடைந்த பிறகு இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் டைம் பற்றி யோசிக்கிறார்கள். நாமும் கொஞ்சம் ஜாலியாக இருக்க வேண்டும், வெளியில் சென்றுவர வேண்டும் என்றெல்லாம் யோசிக்கிறார்கள். இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய மாற்றமாக சமூகத்தில் இப்போது இருந்து கொண்டிருக்கிறது. அதேபோல், ஐடி ஊழியர்கள்போல் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் அவர்களுக்கு ஐடி நிறுவனத்தில் கிடைக்கும் அத்துனை பலா பலன்களும் கிடைக்காத வேலைகளும் இருக்கின்றன.
அவர்களும் தினக்கூலிகளுக்கு நிகரானவர்களே. அவர்களும் இப்படியான வேகமான வாழ்க்கை பயணத்திலேயே பயணித்துக் கொண்டிருப்பவர்கள் தான். ஆனால், கடைநிலை தினக்கூலிகள் போல் அல்லாமல் கொஞ்சம் மார்டன் டிரஸ் போட்டு இருப்பார்கள். அந்தவரிசையில் சொமேட்டோ நிறுவனத்தின் வேலையையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் பணியாற்றும் ஊழியரின் ஒருவரின் வீடியோ தான் இப்போது வைரலாகியிருக்கிறது.
அவர் உணவு டெலிவரி முடித்துவிட்டு சாலையோரம் நின்று அல்லு அர்ஜூனில் ராமுலோ ராமலோ பாடலுக்கு ரீல்ஸ் செய்து போட்டிருக்கிறார். சூப்பராக டான்ஸ் ஆடியிருக்கும் அந்த வீடியோ யூடியூப்பில் அதிக பார்வைகளைப் பெற்றிருக்கிறது. நல்ல திறமைசாலியாக தெரியும் அவருக்கு விரைவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கட்டும் என பலரும் வாழ்த்தியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | திடீரென தாக்கிய இறந்த முதலை, அரண்டு ஓடிய மக்கள்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ