வைரல் வீடியோ: சமூக ஊடகத்தில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகிறது. அவை அனைவராலும் ரசிக்கப்படுகிறது. அதிலும் பாம்பு வீடியோ என்றால் அதற்காக தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ வித்தியாசமாக இருப்பதால், அவற்றை பார்ப்பதில் அனைவருக்கும் ஆவல் அதிகமாக இருக்கிறது. அதிலும் அண்மையில் மிகப் பெரிய பாம்பு ஒன்றுடன் செல்ஃபி போஸ் கொடுக்கும் துணிச்சல்கார இளைஞரின் வீடியோ மிகவும் அதிகமானவர்களால் பார்க்கப்படும் வீடியோவாக மாறிவிட்டது.
நாகப்பாம்புடன் அச்சமின்றி போஸ் கொடுக்கும் துணிச்சல்காரரின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதைப் பார்க்கும் பலரும் பலவிதமாய் கருத்துக்களை பதிவிட்டாலும், அசட்டுத் துணிச்சல் என்ற எண்ணம் பலரின் மனதிலும் எழுகிறது.
பாம்பு (Snake) என்ற வார்த்தையைக் கேட்டாலே பத்தடி தூரம் ஓடுபவர்களுக்கு மத்தியில் பத்தடிக்கும் அதிகமான நீளமுள்ள பாம்பை ஒருவர் கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?
இணையத்தை பற்றி எரிய வைத்த வைரல் வீடியோ சமூக ஊடகத்தை கலக்கினாலும், வீடியோவைப் பார்த்தால் பயமாகத் தான் இருக்கிறது. நீங்களும் வீடியோவை பார்த்தால் இந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.
இந்த வீடியோவை @sahabatalamreal என்ற Instagram பயனர் பகிர்ந்துள்ளார். இந்த அச்சமூட்டும் வீடியோவில், ஒரு மனிதன் ஒரு நாகப்பாம்புடன் தைரியமாக நிற்கிறார். பதிவிடப்பட்டதில் இருந்து ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
"இது ஒரு பயங்கரமான பாம்பு!" என்று ஒருவர் ஆச்சரியப்பட்டால், மற்றொருவர் "இந்த மலைப்பாம்பைப் பார்த்தால் பெரியதாக இருக்கிறது. உண்மையில் இந்தப் பாம்பை நேரில் பார்த்தால், முதுகுத்தண்டு சில்லிட்டுவிடும், நான் என்ன ஆவேன் என்று தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.
மற்றும் ஒரு பாம்பு ரசிகரோ, இவ்வளவு பெரிய பாம்பை தைரியமாக கையில் பிடித்துக் கொண்டு நிற்கும் இளைஞர் பாராட்டப்பட வேண்டியவர் என்று பாராட்டுகிறார். திட்டோ, பாராட்டோ, பார்க்கவே பிரமிப்பைத் தூண்டும் இந்த வீடியோவைப் பார்த்தால் அதிர்ச்சியும் பயமும் ஏற்படுகிறது.
உண்மையில் இந்த பாம்பு நம் அருகில் வந்தால் என்ன செய்வோம்? என்று மற்றும் ஒரு பயனர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலையும் அவரே சொல்கிறார். பாம்பு கடிக்கவே வேண்டாம். அதைப் பார்த்த பயத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துவிடுவேன் என்று சொல்கிறார். உண்மை தான்... பாம்பு என்ற சொல்லே பயத்தை ஏற்படுத்தும் போது, எல்லோருக்கும் இந்த துணிச்சல்கார இளைஞரைப் போல தைரியம் இருக்குமா என்ன?
மேலும் படிக்க | தீபாவளி அட்ராசிட்டீஸ்! ’உண்மையிலேயே’ பூசை வாங்கறது இதுதானா? மிதி வாங்கும் பக்தர்கள்
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ