ஏய் என்னை விட்டுட்டு போறியே! பறக்கத் தெரியாதோ என்று பதற வைக்கும் வித்தியாசமான வீடியோ

Roost To Sky Video Viral: இயற்கையில் இயல்பான விஷயங்கள் கூட நமக்கு அதிசயமாகத் தெரிகின்றன. எங்களுக்கு யாருமே டிரெயினிங் குடுக்கலை தெரியுமா? என்று வெளவால்கள் சொல்லுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 24, 2023, 02:16 PM IST
  • இயற்கையில் இயல்பான விஷயங்கள் கூட அதிசயமே
  • வெளவால்கள் இருக்கும் பொந்துகள்
  • ஆந்தைகளில் இடத்தை பறித்துக் கொண்டதா வெளவால்?
ஏய் என்னை விட்டுட்டு போறியே! பறக்கத் தெரியாதோ என்று பதற வைக்கும் வித்தியாசமான வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: சமூக வலைத்தளங்களில் பல வித வீடியோக்கள் வைரல் ஆகின்றன. அதிலும், விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ரசிகர்கள் அதிகம், செல்ல பிராணிகளின் வீடியோக்களை கொண்டாடுவதற்கான காரணத்தை சொல்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. மனிதர்கள் செயல்கள் என்னவென்று நமக்குத் தெரியும் என்பதால், அவை நமக்கு இயல்பான விஷயங்களாக இருக்கின்றன என்றால் அது சரியானதே.

நாம் வாழ்க்கையில் அதிகம் பார்த்திராத அல்லது எதிர்பார்க்காத விஷயங்களை தெரிந்துக் கொள்ளவும், பார்த்து ரசிக்கவும் விரும்புகிறோம். மன அழுத்தத்தையும் டென்ஷனையும் போக்கும் சுவாரசியமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்து, ரசித்து லைக் போட்டு மக்கள் மகிழ்கின்றனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை என சாதாரணமான வீட்டு விலங்குகளின் வீடியோக்கள் முதல், காட்டு விலங்குகளின் காமெடி வரை, பலதரப்பட்ட விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகின்றன.

அதிலும், விலங்குகளில் குறும்பு வீடியோக்கள் பலரையும் கவர்கின்றன. ரசிக்கக்கூடிய விலங்குகள் என்ற பட்டியலில் இல்லாத விலங்குகளோ மேலும் அதிகமாக ரசிக்கப்படுகின்றன. தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோவில் உள்ள காட்சிகளை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது.

வைரலாகும் வெளவால் வீடியோ: 

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த அற்புதமான வீடியோவை இதுவரை பல லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர். வெளவாலின் டேக் ஆஃப் வீடியோ இது...

இந்த வீடியோவிற்கு லைக்குகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

மேலும் படிக்க | கொள்ளை அழகு ... மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முயல் - நாய் குட்டி வீடியோ!

இந்த வீடியோவில் வனத்தில் புகைப்படம் எடுக்கச் சென்றவர்கள் எடுத்த இந்த வீடியோ, குறு வீடியோவாக இருந்தாலும், அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது, இதை கிளாசிக் என்று சொல்லலாம்.

சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும். இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. ஆனால், வெளவால் பறக்கும் என்று தெரியும், ஆனால் அது எப்படி பறக்கும், எங்கே தங்கும் என்பது போன்ற தகவல்கள் அனைத்தையும் சில நொடிகளில் சொல்லும் இது போன்ற வீடியோக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்து வைரலாகின்றன.

மேலும் படிக்க | தானம் செஞ்சவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி! க்யூட்டாய் நன்றி சொல்லும் சிம்பன்சி

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News