Elephant Video: அய்யோ பாவம் எப்படி காப்பாத்தப் போறாங்க? பகீரென திகில் எழுப்பும் வீடியோ

Saving Elephants Viral Video: குட்டியை காப்பாற்றுவது, அதன் பெற்றோர்களா என்பதை உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், காக்கும் மனம் கொண்ட அனைவருமே தாய் தான் என்று சொல்ல வைக்கும் வீடியோ இது    

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2023, 02:04 PM IST
  • பெத்த புள்ளையா இல்லாட்ட என்ன? உசுரு போனா வருமா?
  • யானைகளின் பாச வீடியோ வைரல்
  • வாக்கிங் போகும் போது பாத்து போகக்கூடாத குட்டி?
Elephant Video: அய்யோ பாவம் எப்படி காப்பாத்தப் போறாங்க? பகீரென திகில் எழுப்பும் வீடியோ title=

குளத்தில் விழுந்த யானை வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில், யாருமே கற்பனை செய்து முடியாக சில விஷயங்களையும், பார்க்க முடியாத சில விஷயங்களையும் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். வைரலாகும் வீடியோக்களில் இருக்கும் பல விஷயங்கள் நம்மை சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கின்றன. ஆச்சரியப்பட வைக்கின்றன, அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சமூக ஊடக உலகில், பதிவிடப்படும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் இப்படியுமா? என்ற கேள்வியுடன் மலைப்பையும் ஏற்படுத்துகின்றன. மலைப்பு என்றவுடன், இது மலைப்பாம்பு வீடியோ என்று நினைத்துவிட வேண்டாம்.

ஆனால், மலைக்க வைத்தாலும், சலிக்காத பாச வீடியோ இது. குட்டியை பாதுகாக்கும் தாயின் அன்பை வெளிப்படுத்தும் வீடியோ. உண்மையில் விலங்குகள், தங்களுடன் இருக்கும் குட்டியைக் காப்பாற்றுகின்றன. அந்தக் குட்டியை காப்பாற்றுவது, அதன் பெற்றோர்களா என்பதை உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், காக்கும் மனம் கொண்ட அனைவருமே தாய் தான் என்று சொல்ல வைக்கும் வீடியோ இது.

மேலும் படிக்க | என்னதான் கணவன் மனைவியா இருந்தாலும் இப்படியா செய்யுறது: வைரல் வீடியோ

நீச்சல் குளத்தில் யானைக்குட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், யானைகள் ஒரு நீச்சல் குளத்தின் அருகில் நடந்து வருகின்றன. உல்லாசமாக நடந்துக் கொண்டிருந்த யானைகளில், ஒரு குட்டி யானை தொபுக்கடீர் என தண்ணீருக்குள் விழுந்துவிடுவதைப் பார்த்தால், நமக்கே அய்யோ பாவம் என்று தோன்றுகிறது. 

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், பதறியடித்து அந்த குளத்திற்குள் பெரிய யானைகள் இறங்கி, புத்திசாலித்தனமாய் குட்டியை மீட்பது பார்க்க சுவாரசியமாக இருக்கிறது. 

மேலும் படிக்க | தம் அடிச்சு மாஸ் காட்டும் குரங்கு: வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்படாமல் இருந்தால், இந்த ‘கிரேட் எஸ்கேப்’ வீடியோவை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்காது. அதிலும், கூட இருந்த யானைகள் காப்பாற்ற முயல்வதும், தூரத்தில் இருக்கும் ஒரு யானை தவிப்பதும் அனைவரின் மனதை கொள்ளைக் கொள்கின்றன.

தன் கூட்டத்தில் உள்ள ஒரு யானைக்கு ஆபத்து என்றதும், தொலைவில் இருந்தாலும், அந்த யானை நிலைகொள்ளாமல் தவிப்பதும், அங்கும் இங்கும் ஓடுவதும் பார்க்கவே மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

பயப்பட வைக்கும் இந்த வைரல் வீடியோ, ஆயிரக்கணக்கான வியூஸ்ககளையும் லைக்குகளையும் பெற்று கலக்குகிறது. இதற்கு பல வித கமெண்டுகளும் வருகின்றன. 

மேலும் படிக்க | தன்னைத்தானே கிண்டல் செய்துக் கொள்ளும் எலோன் மஸ்க்! வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News