சிங்கத்தை சின்னாபின்னப்படுத்தும் எருமை வீடியோ வைரல்! பரிதவிக்கும் விலங்கின் பரிதாபம்

Wild Animals Fight Video Viral: சிங்கத்தை சின்னாபின்னமாக்கும் எருமையின் வலிமை அசர வைக்கிறது. சிங்கத்துக்கே சவால் விடும் எருமையிடம் ஒரு சிங்கம் சிக்கித் தவித்தால், மற்றொரு சிங்கமும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 23, 2023, 04:07 PM IST
  • சிங்கத்துக்கே சவால் விடும் எருமை!
  • பரிதாபமாய் ஊளைவிடும் காட்டு ராஜாவின் கதறல்
  • சிங்கத்தை சின்னாபின்னப்படுத்தும் விலங்கு வீடியோ வைரல்
சிங்கத்தை சின்னாபின்னப்படுத்தும் எருமை வீடியோ வைரல்! பரிதவிக்கும் விலங்கின் பரிதாபம் title=

ஆச்சரியமான விஷயங்களால் நம்மை உறைய வைக்கும் இணையதளங்களும், சமூக ஊடகங்களும் பிரமிப்பைக் கொடுக்கின்றன. இன்று நமது வாழ்வுடன் ஒன்றிவிட்ட சமூக ஊடகங்களில், நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களைப் பார்க்க முடிகிறது. நன்மைகளுக்கு மட்டுமல்ல, சர்ச்சைக்குரிய விஷயங்களும் இணையத்தில் நிரம்பி வழிவதால், கொஞ்சம் உஷாராக இருங்கள் என்று சைபர் கிரைம் போலீசாரும் எச்சரிக்கின்றனர்.

ஆனால், அழகிருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்று சொல்வதைப் போல, சமூக ஊடகங்களிலும் ஆபத்துகளுக்கு மத்தியில் நல்ல விஷயங்களும் கிடைக்கின்றன. 

வைரல் வீடியோக்கள்

மகிழ்ச்சியான தருணங்கள் முதல், நிலநடுக்கத்தின் சில நொடிகள் வரை அனைத்தையும் அருகில் இருந்து  பார்த்த நிறைவைத் தரும் வீடியோக்கள் நமது வாழ்க்கையில் வண்ணத்தை சேர்க்கின்றன அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் நாம் காண முடியாத, உணரவே முடியாத பல வித்தியாசமான அனுபவங்களைத் தருவதால், அவை வைரலாகின்றன.

மேலும் படிக்க | குறும்பா! அது கிலோ என்ன விலை? பவ்யமாய் ஸ்கூலுக்கு போகும் குரங்குக்குட்டிகள் வீடியோ வைரல்

அதிர வைக்கும் வீடியோக்கள்

இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. விலங்குகளின் வேட்டை வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இணையவாசிகள் இந்த வீடியோவை அதிக அளவில் பார்ப்பதால், பல பார்வைகளையும் லைக்குகளையும் பெற்று வருகிறது. பார்த்து ரசிக்கின்றனர்.

தற்போது வைரலாகி வரும் வீடியோவில் சிங்கத்தை சின்னாபின்னமாக்கும் எருமையின் வலிமை அசர வைக்கிறது. சிங்கத்துக்கே சவால் விடும் எருமையிடம் ஒரு சிங்கம் சிக்கித் தவித்தால், மற்றொரு சிங்கமும் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறது. வீடியோவைப் பாருங்கள்

சிங்கம் காட்டின் ராஜாவாக இருந்தாலும், வலிமையான காட்டெருமையின் முன் சிக்கித்தவிக்கிறது. ஒற்றை எருமை சிங்கங்களைப் படுத்தும் பாடு ஆச்சரியப்பட வைக்கிறது. தண்ணீருக்குள் பரிதவிக்கும் சிங்கங்களின் வீரம் படுத்துவிட்டது.  

மேலும் படிக்க | Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

சிங்கங்கள் மீது காட்டெருமை நடத்தும் தாக்குதல்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சிங்கங்கள் தண்ணீருக்குள் நின்றிருக்க, அதில் ஒன்று காட்டெருமையின் வாய்க்குள் சிக்கிக் கொண்ட காட்சியை பார்க்க முடிகிறது. காட்டெருமையின் பிடி உடும்புப்பிடியாக இறுகி இருக்க, கழுத்தை எதிரியின் வாய்க்குள் கொடுத்த சிங்கத்தின் நிலையை வாயால் சொல்லித்தான் தெரிந்துக் கொள்ள வேண்டுமா?

தன்னுடைய கூட்டாளி சிக்கிக் கொண்டதைப் பார்க்கும் சிங்கத்துக்கு மூளை வேலை செய்யவில்லை போல! இல்லை அது தன் பலத்தை மறந்துவிட்டதா என்று தோன்றுகிறது. இல்லை தண்ணீருக்குள் தனது பலத்தை தொலைத்துவிட்டதா சிங்கம் என்ற கேள்வியும் எழுகிறது.

ஆனால், எருமையின் பாடு கொண்டாட்டம் என்று தோன்றினாலும், எப்போது வேண்டுமானாலும் எதிரியில் இருக்கும் சிங்கம் கடும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எருமையின் நிலையும் சரியில்லை. 

வலியவன் வாழ்வான்... என்ற முதுமொழியை நினைவுப்படுத்தும் காட்டு விலங்குகளின் தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News