2008-ஆம் ஆண்டு IPL துவங்கப்பட்ட போது மகேந்திர சிங் தோனியை சென்னை அணி எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது தெரியுமா?...
IPL தொடரின் 12-வது சீசன் இன்று இறுதி போட்டி காணுகின்றது. துவங்கப்பட்ட நாளில் இருந்து 12 ஆண்டுகள் ஆகியும் இதுவரை IPL தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை. எனினும் வீரகளின் மவுசு அப்படியோ இருந்துவிடுவதில்லை. இதற்கு தோனி மட்டும் விதிவிலக்கா என்ன?
IPL இறுதி போட்டிக்கு இன்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், தற்போது 11 வருடங்களுக்கு முன்பு, 2008-ஆம் ஆண்டு முதன் முதலாக IPL தொடரில் தல தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது என்ற விவரம் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
IPL வீரர்களை ஏலம் விடுவதில் மிகவும் பிரபலமானவர் ரிச்சர்ட் மேட்லி. இவர் தனது ட்விட்டரில் 2008-ஆம் ஆண்உட வீரர்கள் ஏலம் விட்டபோது எந்த வீரர் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டார் என்ற விபரத்தை வெளியிட்டுள்ளார். அதில், 40,000 அமெரிக்க டாலர்களை அடிப்படை விலையாகக் கொண்ட மகேந்திர சிங் தோனியை, 1.5 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 கோடி) டாலருக்கு சென்னை சூப்பர் கிஸ் அணி வாங்கியுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகின்றது.
Just found my one and only auction sheet for the historic first ever #VIVOIPL auction in 2008.@msdhoni sold to @ChennaiIPL A rare piece of cricket memorabilia
Will be watching #CSKvMI on @hotstarUK #CricketMeriJaan #WhistlePodu #VIVOIPLFinal pic.twitter.com/5M5qY2tPy5— Richard Madley (@iplauctioneer) May 12, 2019
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள IPL 2019 தொடரின் இறுதி போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இதுவரை, இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. அதனால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.