தனது காதலை வெளிப்படுத்த நாடு ரோட்டில் இளம்பெண் செய்த செயல்!

பாலிவுட் நடிகராக கார்த்திக் ஆரியனுக்கு அவரது ரசிககை ஒருவர் நடுரோட்டில் முட்டிபோட்டு காதலை சொன்ன வீடியோ வைரல்!!

Updated: Sep 30, 2019, 03:00 PM IST
தனது காதலை வெளிப்படுத்த நாடு ரோட்டில் இளம்பெண் செய்த செயல்!

பாலிவுட் நடிகராக கார்த்திக் ஆரியனுக்கு அவரது ரசிககை ஒருவர் நடுரோட்டில் முட்டிபோட்டு காதலை சொன்ன வீடியோ வைரல்!!

பாலிவுட்டில் சமீபமாகப் பிரபலமாகி வரும் இளம் நடிகர் கார்த்திக் ஆரியன். இவர் "சோனு கே திட்டு கி ஸ்வீட்டி" என்ற ஹிந்தி படத்தில் நாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் இந்தி திரை உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி கார்த்திக் ஆரியனுக்கு சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய பெண் ரசிகைகளை உருவாக்கியது. 

தற்போது கார்த்திக் ஆரியன் பெண்கள் மத்தியில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வருகிறார். இந்நிலையில் கார்த்திக் ஆரியனை எப்படியாவது பார்க்க வேண்டுமெனக் கல்லூரி மாணவிகள் சிலர் அவர் வீட்டின் முன்பு சுமார் 15 நாட்களாக தினமும் வந்து காத்திருந்துள்ளனர். விடாப்பிடியாக அந்த பெண்கள் அங்கே இருந்ததால் அந்த பெண்களைச் சந்திக்க கார்த்திக் ஆரியன் முடிவு அவரே வீட்டில் இருந்து வெளியே வந்து அந்த பெண்களைச் சந்தித்தார்.

அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பெண் வீதியில் முழங்காலிட்டு கார்த்திக் ஆரியனிடம் காதலை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத கார்த்திக் ஆரியன் அந்த பெண்ணை தூக்கி விட்டார். பின்னர் அவரிடம் இது போல் எல்லாம் செய்யாதீர்கள் என அன்பாக சொல்லிவிட்டு அந்த பெண்ணுடன் ஒரு செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது. இதற்கிடையில் நடிகர் கார்த்திக் ஆரியனும், நடிகர் ஷாருக்கானின் மகள் ஷார அலிகானும் தற்போது டேட்டிங்கில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இருவரும் பொது இடங்களில் எடுக்கும் போட்டோக்களை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாறி மாறி வெளியிட்டு வருகின்றனர்.