மூர்க்கமாய் தாக்க வந்த காட்டு யானைக் கூட்டம்; உயிர் தப்பிக்க மரத்தின் மேல் தஞ்சம் அடைந்த நபர்!

கேரளாவில் உள்ள இடுக்கியில், காட்டு யானையிடம் சிக்கிய ஒருவர் அரும்பாடுபட்டு தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 27, 2022, 05:28 PM IST
  • யானைக் கூட்டம் சுற்றி வளைத்ததால், உயிர் தப்பிக்க மரத்தின் மீது ஏறிய அந்த நபர்.
  • கேரளா இடுக்கியில், நடந்த சம்பவம்
மூர்க்கமாய் தாக்க வந்த காட்டு யானைக் கூட்டம்; உயிர் தப்பிக்க மரத்தின் மேல் தஞ்சம் அடைந்த நபர்! title=

 

இடுக்கி: கேரளாவில் உள்ள இடுக்கியில், காட்டு யானையிடம் சிக்கிய ஒருவர் அரும்பாடுபட்டு தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானைக்கூட்டம் திடீரென தன்னை தாக்க வந்ததால், திகிலடைந்த சஜி என்ற அந்த நபர், வேறு வழியின்றி, மரத்தில் ஏறினார். எக்காளம் முழங்க யானைகள் சூழ்ந்ததால் மூச்சை அடக்கிக்கொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் மரத்தில் தஞ்சம் புக நேரிடும் என்று பாவம் அந்த நபர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

இடுக்கியில், சில உள்ளூர்வாசிகள் பதிவு செய்த வீடியோவில், ஒரு மனிதன் மரத்தில் அமர்ந்திருப்பதையும், யானை கூட்டம் மரத்தை சூழ்ந்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது. செவ்வாயன்று, சஜி ஊடகங்களுக்குத் இது குறித்து தெரிவிக்கையில், மலை அடிவாரத்தில் கீழே தங்கியிருந்த தற்காலிக டெண்ட் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், ஒரு வேலையாக மலை ஏறிச் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தார். யானைக் கூட்டம் சுற்றி வளைத்ததால். உயிர் தப்பிக்க மரத்தின் மீது ஏறிய அந்த நபர், உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியுள்ளார். உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் மிகவும் சத்தமாக கத்தியதாகவும், அந்த நபர் கூறினார்.

மேலும் படிக்க | Viral Video: கேமராவில் சிக்கிய அற்புத காட்சி; நாகமணியை பாதுகாக்கும் ராஜநாகம்!

“சில யானைகள் திடீரென்று நான் சென்ற வழியில் ஓடி வந்தன. நான் எதுவுமே செய்யாத போது, என்னை தாக்க வந்தன. நான் சட்டென்று மரத்தில் ஏறினேன்...அடுத்த ஒன்றரை மணி நேரம் அங்கேயே உட்கார வேண்டியிருந்தது,” என்றார்.

வனத்துறை அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், இந்த மலை பகுதிக்கு போகாதீர்கள் என எச்சரிக்கப்பட்ட போதிலும், யானைகள் அதிகம் சுற்றித் திரியும் பகுதிக்கு அந்த நபர் சென்றதாக தெரிவித்தார். யானைக் கூட்டத்தின் மற்ற யானைகள் சென்று விட்ட போதிலும், யானைகளில் ஒன்று மரத்தின் அருகே இருந்ததால், அவரால் கீழே ஏற முடியவில்லை, அதிகாரிகள் திரும்பி வந்து அதை விரட்டும் வரை சிறிது நேரம் மேலே காத்திருக்க வேண்டியிருந்தது எனவும் கூறினார்.

மேலும் படிக்க | Viral Video: அம்பை போல பாயும் சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான முதலை!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News