பி.டி உஷா போலவே ஓடும் குரங்கு! இரு கால்களில் பறக்கும் குரங்கின் ஓட்டச் சேட்டை!

அதிர்ச்சியையும், ஆசுவாசத்தை கொடுக்கும் குரங்கு சேட்டை வீடியோ இது. கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழியை உண்மையாக்கும் வீடியோ இது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 09:26 AM IST
  • குரங்கு சேட்டை வீடியோ வைரல்
  • இரண்டு கால்களில் ஓடும் குரங்கு
  • மலைப்பாதையில் தடுப்பு சுவரில் வேகமாக ஓடும் குரங்கு
பி.டி உஷா போலவே ஓடும் குரங்கு! இரு கால்களில் பறக்கும் குரங்கின் ஓட்டச் சேட்டை! title=

புதுடெல்லி: பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன, அவை மக்களுக்கு சிலிர்ப்பை மட்டுமல்ல, அதிர்ச்சியையும், ஆசுவாசத்தை கொடுக்கின்றன. அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டப் பந்தய வீரரைப் போல ஓடும் குரங்கின் வீடியோ, அதிர்ச்சியையும், ஆசுவாசத்தை கொடுத்து குரங்கு சேட்டை என்று சொல்லவும் வைக்கிறது.

கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழியை உண்மையாக்கும் இந்த வீடியோவில், முழு வேகத்தில் ஓடுவதைக் காணலாம். மலைப்பகுதியில் சாலை ஓரத்தில் குரங்கு ஒன்று அதிவேகமாக ஓடுவது வைரலாவதற்கு (Monkey video) காரணம் என்ன தெரியுமா?

குரங்கு இரண்டு கால்களை மட்டுமே பயன்படுத்தி ஓடுகிறது. உண்மைதான், மனிதன் ஓடுவது போல் குரங்கு இரண்டு கால்களிலும் ஓடுவதை பார்க்கவே பயமாக இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்று குரங்கு ஓடும்போது பயமாய் இருக்கிறது.

மலைப்பாதையில் தடுப்பு சுவரில் வேகமாக ஓடும் குரங்கு பி.டி. உஷாவைப் போல வேகமாக ஓடுகிறது. இந்த குரங்கு சிறு தவறு செய்திருந்தாலும், ஒரு அடி தவறியிருந்தாலும் கூட, மலையில் இருந்து நேராக பள்ளத்தில் விழுந்திருக்கும் என்பதால் வீடியோ அதிர்ச்சியையும்  ஏற்படுத்துகிறது. 

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மக்கள் வேடிக்கையாக ரசித்துப் பார்க்கின்றனர். குரங்கு பள்ளத்தில் விழாது என்றும், விழுந்தாலும் குதித்து மரத்தில் ஏறியிருக்கும் என்றும் பல்வேறுவிதமான கருத்துக்களை மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ | Viral Video: கேமராவில் சிக்கிய நாகப்பாம்பு Vs கீறி சண்டை

உண்மையில் குரங்குகள் என்றாலே அவை செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் நினைவுக்கு வரும். அதிலும், இந்த குரங்கின் ஓட்டச் சேட்டை அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இந்த வீடியோ மிக வேகமாக பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. 

இந்த வீடியோவை (Monkey video) 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் @naturelovers_ok என்ற கணக்கில் இருந்து இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

இந்த வீடியோவை  9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தனது வேகத்தில் உசைன் போல்ட்டையும் ஓரக்கட்டிவிடும் இந்த குரங்கு என்று ஒரு பயனர் எழுதுகிறார்.

இது போன்ற வைரல் செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ALSO READ | குரங்குக்கு காதல் வந்தா என்ன நடக்கும்? இந்த வீடியோவில் பாருங்க!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News