நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் சிங்கள் டிராக் வெளியீடு..

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் சிங்கள் டிராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது!!

Last Updated : May 30, 2019, 01:42 PM IST
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் சிங்கள் டிராக் வெளியீடு.. title=

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் சிங்கள் டிராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது!!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட  நடிகர் தான் சிவகார்த்திகேயன், இவர் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து, அதிலும் மாபெரும் வெற்றியை அடைந்து இப்போது இரண்டாவதாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்துள்ளார்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்க, சின்னத்திரை பிரபலமான ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத், ராதா ரவி என பலர் நடித்துள்ளனர். காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கள் டிராக் கனா இண்டர்நெட் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் படத்தின் டீசர் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News