பிரபல செய்தி வாசிப்பாளருக்கு திருமணம் முடிந்தது; வைரலாகும் Pics!

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் அனிதா சம்பத் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Updated: Aug 27, 2019, 10:02 PM IST
பிரபல செய்தி வாசிப்பாளருக்கு திருமணம் முடிந்தது; வைரலாகும் Pics!

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் அனிதா சம்பத் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தனது திருமணம் குறித்து இன்ஸ்டகிராம் பதிவில் அனிதா சம்பத் குறிப்பிட்டுள்ளதாவது.,  "25-ம் தேதி திருமணம் முடிந்தது. 22-ம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன். இன்ஸ்டாவில் 26-ம் தேதி வரை ஏதோ காரணத்தால் பிளாக் செய்யப்பட்டு இருந்தது. எனவே அதுவரை என் பதிவு போஸ்ட் செய்யப்பட முடியாமல் போய்விட்டது..

ஃபேஸ்புக், ட்விட்டரில் நான் தீவிரமாக இல்லை. இன்ஸ்டாவும் வேலை செய்யவில்லை என்பதால் சொல்ல முடியாமல் போய்விட்டது. மன்னிச்சூ..

அனிதா சம்பத் திடீர் திருமணம் என்றெல்லாம் யூடியூப் சேனல்களில் டப்ஸா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை.

3 வருடக் காதல். பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த திருமணம் தான்.

திருமணத்திற்கு தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனவே மிக மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம். முன்கூட்டியே திருமணம் பற்றி சொல்லிவிட்டால் யூடியூப் சேனல்களில் வந்துவிடும். பின் நான் அழைக்காதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் கடைசியில் பதிவு செய்தேன். இன்ஸ்டகிராம் 26-ம் தேதி வரை பிளாக்கில் இருந்ததால் இன்றுதான் பதிவிட முடிந்தது. வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக இளைஞர்கள் பலரை செய்தி தொலைக்காட்சி பக்கம் ஈர்த்தவர் அனிதா சம்பத். நியூஸ் 7 தொலைக்காட்சி மூலம் அனைவருக்கும் பரிட்சையமாகி தற்போது சன் குழக தொலைக்காட்சியில் பிரபலமாகி வரும் இவர் சர்கார், வர்மா சில படங்களின் காட்சிகளில் நடித்துள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

முதலில் பெரிய பெரிய பெரிய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இன்ஸ்டா நண்பர்களுக்கு.. . 25ஆம் தேதி திருமணம் முடிந்தது..22ஆம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன்..இன்ஸ்டாவில் 26ஆம் தேதி வரை ஏதோ காரணத்தால் block செய்யப்பட்டு இருந்தது..எனவே அது வரை என் பதிவு போஸ்ட் செய்யப்பட முடியாமல் போய்விட்டது.. . Fb,twitter-ல் நான் active இல்லை..இன்ஸ்டாவும் வேலை செய்யவில்லை என்பதால் சொல்ல முடியாமல் போய்விட்டது..மன்னிச்சூ.. . "அனிதா சம்பத் திடீர் திருமணம்" என்றெல்லாம் YouTube channelகளில் டப்ஸா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்..அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. . 3 வருட காதல்..பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த proper திருமணம் தான்.. . திருமணத்திற்கு தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை..எனவே மிக மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம்.. முன்கூட்டியே திருமணம் பற்றி சொல்லிவிட்டால் YouTube channelsல் வந்துவிடும்..பின் நான் அழைக்காதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான்..கடைசியில் post செய்தேன்..insta 26th வரை blockedல் இருந்ததால் இன்று தான் பதிவிட முடிந்தது.... . என் சார்பாகவும் என் வாழ்வினை சார்பாகவும் Instaவில் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. . Thank u guys..!!! One more new entry into our insta family..Mr.praba @itsme_pg

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

இந்நிலையில் இவரது திருமண நிகழ்வில் தொலைகாட்சி, ஊடகத்தை சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். இவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.