அதிகாரப்பூர்வ அறிவிப்பு: STR இன் Maanaadu படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியீடு!

சமீபத்தில் ஈஸ்வரன் பட டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு, அடுத்ததாக மாநாடு குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Nov 19, 2020, 10:15 AM IST
    1. மாநாடு குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    2. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு.
    3. சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியாக நடித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: STR இன் Maanaadu படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியீடு! title=

ஈஸ்வரன் படத்தின் படபிடிப்பை முடித்து மாநாடு படப்பிடிப்பில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாநாடு. 

இப்படத்தில் சிம்புவுடன்  (Simbuஇணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Image

 

ALSO READ | சிம்பு வெளியிட்ட சர்ப்ரைஸ் போட்டோஸ்..! ஆச்சரியத்தில் ரசிகர்கள்....

சமீபத்தில் ஈஸ்வரன் பட டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு, அடுத்ததாக மாநாடு குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இயக்குநர் வெங்கட் பிரபு இன்று காலை 9.09 மணிக்கு மாநாடு படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகிறது. சிம்பு ரசிகர்கள் தயாராக இருங்கள் என தெரிவித்து இருந்தார். அந்தவகையில் தற்போது மாநாடு படத்தின் டீஸர் வெளியீடு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் சிம்பு (STR). நவம்பர் 21ம் தேதி காலை 10.44க்கு மாநாடு படத்தின் டீசர் வெளியாவதாக சிம்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன் மாநாடு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில்.,

 

 

Image

நீ தனியாளாக இருந்தாலும் சரியான ஒன்றுக்காக துணிந்து நில் என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாநாடு படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

ALSO READ | மீண்டும் உருவாகும் ‘அவள் அப்படித்தான்’; ஸ்ருதி, சிம்பு மற்றும் துல்கர் உடன் பேச்சுவார்த்தை!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News