அனல் பறக்கும் வரிகளுடன்; பேட்ட First Single வெளியானது!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Updated: Dec 3, 2018, 06:20 PM IST
அனல் பறக்கும் வரிகளுடன்; பேட்ட First Single வெளியானது!
Screengrab

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 

பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. எனினும் அதிகாரப்பூர்வ தகவகள் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் என்னும் பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுத, அனிரூத் இசையமைத்து பாடியுள்ளார். தர லோக்கலாக பாடல் வரிகள் தொடுக்கப்பட்டு நிலையில் ரசிகர்களிடையே மரண மாஸ் வரவேற்பினை பெற்றுள்ளது இப்பாடல்.