ஜீவா-வின் 'கொரிலா' திரைப்பட அதிரடி teaser வெளியானது!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கொரிலா திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2018, 01:47 PM IST
ஜீவா-வின் 'கொரிலா' திரைப்பட அதிரடி teaser வெளியானது! title=

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கொரிலா திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே நடித்து வரும் திரைப்படம் 'கொரலா'. ஆல் இன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகிவரும் இப்படத்தில் சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்உ குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் வேதா புகழ் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பொறுப்பினை ரூபன் ஏற்றுள்ளார். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றுள்ள சிம்பன்சி குரங்கு டீஸர் வாயிலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிம்பன்சி குரங்குடன் இணைந்து 3 நண்பர்கள் வங்கியினை கொள்ளையடிப்பதே இத்திரைப்படத்தின் திரைக்கதை. விரைவில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை தூண்டியுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸரினை படக்குழவினர் வெளியிட்டுள்ளனர்!

Trending News