அடிச்சிடுவேன் பாத்துக்கோ: டென்ஷன் ஆன குரங்கின் வைரல் வீடியோ

Funny Animal Video: சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2022, 06:24 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • கடுப்பான ஒரு குரங்கின் வீடிடோ வைரல் ஆகி வருகிறது.
  • இந்த வீடியோவைப் பார்த்து பலரும் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு வருகிறார்கள்.
அடிச்சிடுவேன் பாத்துக்கோ: டென்ஷன் ஆன குரங்கின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, காரணமே இல்லாமல் கிண்டல் செய்தால் யாருக்கும் கோபம் வரும். நாயையோ, பூனையையோ, குரங்கையோ கிண்டல் செய்து, பின்னர் அவதிப்பட்ட பலரின் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். 

சீண்டலால் கோபம் கொண்ட குரங்கின் அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஒருவர் மீண்டும் மீண்டும் குரங்குகளை கிண்டல் செய்து கடுப்பேற்றுவதை வீடியோவில் காண முடிகின்றது. கடுப்பின் உச்சிக்கு சென்ற குரங்குகள் ஒன்றாக அந்த நபரைத் தாக்க முயற்சிக்கின்றன. ஆனால் அந்த மனிதனின் அதிர்ஷ்டம் என்னவென்றால் கண்ணாடிக்கு இந்தப் பக்கமும் குரங்கும் மறுபுறமும் அவரும் இருக்கிறார்கள். நடுவில் கண்ணாடி இருபதால்தான் அவரும் தைரியமாக குரங்குகளை கடுப்பேற்றினார் என்பது மற்றொரு விஷயம்.

மேலும் படிக்க | என்னய்யா நடக்குது இங்க: விருந்தில் தாத்தா செஞ்ச வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள் 

கோபமடைந்த குரங்கு 

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், கண்ணாடி தடுப்பு வழியாக, ஒருவர் குரங்குகளை தொடர்ந்து கேலி செய்வதை காணமுடிகிறது. குரங்குகளும் வெகு நேரம் அமைதியாக இருக்கின்றன. அவர் ஒரு காகிதத்தை ஓட்டை மூலம் குரங்குகளை நோக்கி உள்ளே நுழைக்கிறார். குரங்கு அதை பிடிக்க வரும்போது பின்னுக்கு இழுத்து விடுகிறார். 

சிறிது நேரம் காகிதத்தை பிடிக்க முயற்சிக்கும் குரங்கு, பின்னர் கோபத்தின் எல்லையைத் தாண்டி, கடுப்பாகி அந்த நபர் மீது பாய முயற்சிக்கிறது. அங்கு இருக்கும் இரு குரங்குகளும் அவர் மீது பாய முயற்சிக்கின்றன. ஆனால் குரங்குகளுக்கு தங்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கண்ணாடி சுவர் இருப்பது தெரியாது. 

இங்கு கண்ணாடி இல்லாவிட்டால், குரங்குகள் அந்த நபருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். கண்ணாடி இருந்ததால், அந்த நபர் தப்பினார். ஆனால், கண்ணாடி இல்லாமல் இருந்திருந்தால், அந்த நபர் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டை குரங்குகளுடன் விளையாடி இருக்கமாட்டார். 

கடுப்பான குரங்குகளின் வீடியோவை இங்கே காணலாம்:

வேடிக்கையான வீடியோ வைரலானது

மனிதனுக்கும் குரங்குகளும் இடையிலான கியூட் சண்டையின் இந்த வீடியோவைப் பார்த்து பலரும் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு வருகிறார்கள். பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். இந்த வீடியோ earth.brains என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் 5.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: முதலையிடம் சிக்கிய வரிக்குதிரைக் கூட்டம்; மன பதற வைக்கும் காட்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News