பட்டையைக் கிளப்பும் பாட்டியின் டான்ஸ், புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

வயது ஒரு எண்ணிக்கைதான் என நிரூபித்து தன் நடனத்தின் மூலம் பட்டையைக் கிளப்பும் பாட்டியின் ஆர்வமும் உற்சாகமும் மக்களின் மனதை வென்று வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2021, 02:42 PM IST
பட்டையைக் கிளப்பும் பாட்டியின் டான்ஸ், புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்: வீடியோ வைரல் title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தேசி தாதி என்று பிரபலமாக அறியப்படும் ரவி பாலா ஷர்மாவின் நடன வீடியோக்கள் சமூக ஊடகங்களில் (Social Media) மிகவும் பிரபலமானவை. இவர் அவ்வபோது பாலிவுட் பாடல்களுக்கு நடன வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாகும். 

இப்போது அவர் சாரா அலி கானின் சமீபத்திய 'சக்கா சக்' பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பதிவேற்றியுள்ளார். இந்த நடன வீடியோ வேகமாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இணைய வாசிகள் இதை அதிக அளவில் விரும்பி பார்த்து வருகிறார்கள். 

இந்த வீடியோவில், 63 வயதான ரவி பாலா சர்மா பச்சை நிற புடவையில், பாலிவுட் நடிகை சாரா அலி கான் போல் நடனமாடுவதை காண முடிகின்றது. இந்த பாடலில் சாரா எவ்வாறு நடனமாடியுள்ளாரோ, அதே போல், இவரும் ஆடியுள்ளது இந்த வீடியோவின் சிறப்பம்சம்.  இந்த வயதிலும், அவர் தனது உடலை மிக ஃபிட்டாக வைத்திருப்பதையும், இள வயது பெண்கள் ஆடும் நடன அசைவுகளையும் மிக லாவகமாக செய்வதையும் காண ஆச்சரியமாக உள்ளது.

ALSO READ | Bizarre Theft: பாலத்தையே திருட முடியுமா? மலைக்க வைக்கும் புதுவித திருட்டு 

பட்டையைக் கிளப்பிய பாட்டி

வயது ஒரு எண்ணிக்கைதான் என நிரூபித்து தன் நடனத்தின் மூலம் பட்டையைக் கிளப்பும் பாட்டியின் ஆர்வமும் உற்சாகமும் மக்களின் மனதை வென்று வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, 63 வயதிலும் ஒருவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக நடனமாட முடிகிறது என்று அனைவரும் வியப்பதில் அதிசயமில்லை. 

இந்த வீடியோ எக்கச்சக்க லைக்குகளை பெற்றுவிட்டது. மேலும், இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் (Netizens) பல்வேறு கமெண்டுகளை அள்ளி வீசி, ரவி பாலா சர்மாவை பாராட்டி வருகின்றனர். 

தன்னுடைய நடனத்தின் மூலம், எதை செய்வதற்கும் வயது ஒரு தடை அல்ல என அந்த பாட்டி மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளதாக பலரும் கமெண்டுகளில் கூறி வருகின்றனர். தனது வீடியோ மூளம் தங்களுக்கு ஊக்கத்தை அளித்ததற்காக பலர் அவருக்கு நன்றி தெரிவித்தும் வருகின்றனர். 

இந்த அருமையான வீடியோவை இங்கே காணலாம்:

ரவி பாலா சர்மாவின் இந்த நடன வீடியோவுக்கு இதுவரை லட்சக்கணக்கான வியூஸ்களும் ஆயிரக்கணக்கான லைக்குகளும் கிடைத்துள்ளன. ‘சக்கா சக்’ பாடல், தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் நடிப்பில் உருவாகி வரும் ‘அத்ராங்கி ரே’ படத்தின் பாடலாகும். இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்ரேயா கோஷல் இப்பாடலை பாடியுள்ளார். 

ALSO READ | வால்பாறையில் ஆட்டை வேட்டையாடும் சிறுத்தை புலி Video Viral 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News