பரம எதிரிகளான 3 நாகப்பாம்புகள் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்? வீடியோ வைரல் ஆகும்

இதில், மூன்று ஆபத்தான ராஜ நாகப்பாம்புகள் காணப்படுகின்றன. இவை மூன்றும் எதிர்பாராத விதமாக, திடீரென ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2021, 06:04 PM IST
பரம எதிரிகளான 3 நாகப்பாம்புகள் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்? வீடியோ வைரல் ஆகும் title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீபத்திய நாட்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இது பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றது. 

இந்த வீடியோ, திடீரென நேருக்கு நேர் பார்த்து சந்தித்துக்கொள்ளும் மூன்று ராஜா நாகப்பாம்புகளைப் பற்றிய வீடியோவாகும். சில மணி நேரங்களில் இந்த வீடியோ ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டது. நெட்டிசன்களும் இந்த வீடியோவுக்கு (Snake Video) பல விதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

ALSO READ | Viral Video: மாப்பிள்ளை ஊர்வலத்தில் பெரும் ‘தீ’; மணமகன் நிலை என்ன ஆனது..!!

வைரலாகி வரும் இந்த வீடியோ ஒரு காட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இதில், மூன்று ஆபத்தான ராஜ நாகப்பாம்புகள் காணப்படுகின்றன. இவை மூன்றும் எதிர்பாராத விதமாக, திடீரென ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கின்றன. இதன் பிறகு வீடியோவில் நாம் பார்க்கும் காட்சி நம்மை அதிசயிக்க வைக்கின்றது. 

சுமார் பத்து அடி நீளமுள்ள ராக நாகங்கள், கழுத்தை உயர்த்தி சண்டையிடும் தோரணையில் இருப்பதைக் காண முடிகின்றது. எனினும், எந்த நாகமும் (King Cobra) மற்ற நாகத்தை தாக்கவில்லை. மூன்றும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டே இருக்கிறது. மூன்று பாம்புகளில் குறிப்பாக, ஒரு பாம்பின் ரியாக்‌ஷன் பார்ப்பதற்கு சுவாரசியமாக  உள்ளது. 

எப்போது வேண்டுமானாலும் மூன்று நாகங்களுக்கும் இடையில் சண்டை மூளலாம் என்ற நிலையில், வீடியோ நிறைவு பெறுகிறது. அடுத்து என்ன நடந்ததோ என்ற பதட்டம் காண்பவர்கள் மனங்களை பற்றிக்கொள்கிறது.

இந்த வித்தியாசமான வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ helicopter_yatra என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

ALSO READ | நெட்டிசன்களை அழ வைத்த அம்மா குரங்கு, குட்டி குரங்கு: வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News