படுத்துக்கொண்டு பணத்தை பக்குவமாய் எண்ணும் பூனை! வைரல் வீடியோ!

பூனை ஒன்று மெத்தையின் மீது அமர்ந்து கொண்டு கட்டு காட்டாக இருக்கும் பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் காட்சி இணையத்தில் பரவி அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 25, 2022, 07:32 AM IST
  • பணத்தை மனிதர்கள் போல் எண்ணும் பூனை.
  • கட்டிலில் படுத்து சொகுசாய் எண்ணுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
படுத்துக்கொண்டு பணத்தை பக்குவமாய் எண்ணும் பூனை! வைரல் வீடியோ! title=

இணையத்தில் ரசிக்கும்படியான காட்சிகள் பல இருக்கின்றன, அதில் நம்மை வியப்படைய வைக்கும் வகையிலான காட்சில் விரைவில் கவண் ஈர்ப்பை பெற்று விடுகிறது.  அப்படி நம்மை வியக்க வைக்கும் ஒரு காட்சி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது, நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய், பூனை, முயல், கிளி போன்ற வளர்ப்பு பிராணிகளை எவ்வளவு தான் பாசமாக பார்த்து கொண்டாலும் பணம், நகை போன்ற சில விலையுயர்ந்த பொருட்களை அவற்றிடமிருந்து கொஞ்சம் இடைவெளி விட்டு தான் வைப்போம்.  ஏனென்றால் அவற்றிற்கு விலையுயர்ந்த பொருட்கள் பற்றிய அறிவு இருக்காது, ஆனால் இங்கு வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பூனை ஒன்று காசாளர் போல கட்டு காட்டாக பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறது.  இந்த காட்சியை கண்டு பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க  | ‘ஏய்.. ஃபேர்வெல்லா இது?’ மாணவர்கள் கொடுத்த வினோதமான பிரியாவிடையின் வைரல் வீடியோ

இந்த அற்புதமான காட்சியானது இணையத்தில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில், மெத்தையின் மீது ஒரு பூனை மறந்து இருப்பதையும், அதனருகில் கட்டு காட்டாக பணம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.  பூனைக்கு பக்கத்தில் எப்படி இவ்வளவு பணத்தை தைரியமாக வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும்பொழுது தான் தெரிகிறது, அந்த பூனைக்கு எவ்வளவு அறிவுள்ளது என்பது.  பணம் எண்ணும் இயந்திரம் போலவும், காசாளர் போலவும் அந்த பூனை மெத்தையின் மீது அழகாகி அமர்ந்துகொண்டு அந்த பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறது.  

 

விலையுயர்ந்த பொருட்களை சேதமாகும் விலங்குகளுக்கு மத்தியில் பூனை இவ்வளவு பக்குவமாய் பணத்தை எண்ணுவது அனைவரையும் ஆச்சர்யப்பட செய்துள்ளது.  நம்மை வியக்கவைக்கும் இந்த வீடியோவை இணையாவசிகள் பலரும் ரசித்து திரும்ப திரும்ப பார்த்து வருகின்றனர்.  பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்திருக்கும் இந்த வீடியோவிற்கு இதுவரை நாற்பத்தி மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல சிறப்பான கமெண்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News