'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது!

கதிர் நடிப்பில் உறுவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2018, 07:10 PM IST
'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது! title=

கதிர் நடிப்பில் உறுவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து என பலர் நடித்திருக்கிறார்கள். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். 

காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் டீசர் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்லவரவேற்ப்பை பெற்றது. 

இந்நிலையில், தற்போது இப்டத்தின் பாடல்கள் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படமானது வரும் செப்டம்பர் 28-ம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்ககது.

Trending News