World War III: மூன்றாம் உலகப் போர் வெடிக்கும்... பீதியை கிளப்பும் இந்திய ஜோதிடர்..!!

World War III: மூன்றாம் உலகப் போர் தொடர்பாக கருத்துக்கள் மற்றும் கணிப்புகள் பல தசாப்தங்களாக தீவிர ஊகங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2024, 02:16 PM IST
  • மூன்றாம் உலகப் போர் தொடர்பான கணிப்பு இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
  • நாஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா போன்ற புகழ்பெற்ற ஜோதிடர்களின் கணிப்புகள் அச்சத்தை கொடுத்து வருகின்றன.
  • கொரியா, சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற இடங்களில் ராணுவ செயல்பாடு அதிகரிக்கும்.
World War III: மூன்றாம் உலகப் போர் வெடிக்கும்... பீதியை கிளப்பும் இந்திய ஜோதிடர்..!! title=

World War III: மூன்றாம் உலகப் போர் தொடர்பாக கருத்துக்கள் மற்றும் கணிப்புகள் பல தசாப்தங்களாக தீவிர ஊகங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. முதல் இரண்டு உலகப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பேரழிவு இன்னும் உலக மக்கள் நினைவில் நீங்க இடம் பெற்றுள்ள நிலையில், மற்றொரு உலக் போர் பற்றிய சிந்தனை நிச்சயம் திகிலூட்டும். நாஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா போன்ற புகழ்பெற்ற ஜோதிடர்களின் கணிப்புகள் நீண்ட காலமாக அச்சத்தை கொடுத்து வரும் நிலையில், இப்போது, ​​ஒரு புதிய கணிப்பு வெளிவந்துள்ளது. இது சமூக ஊடகங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

மூன்றாம் உலகப் போர் தொடர்பான கணிப்பு இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் வசிக்கும் ஜோதிடர் குஷால் குமார் கூறிய கணிப்பு வைரலாகி வருகிறது. இந்த கணிப்பு LinkedIn மற்றும் Medium தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அவரது லிங்க்ட்இன் கணக்கு விபரத்தில், அவர் ஒரு ஜோதிட நிபுணர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவர் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றியை கணிப்புகளை விளக்க, கிரக மாற்ற நிலைகளைக் காட்டும் விளக்கப்படங்களைப் பயன்படுத்துகிறார். இதன் அடிப்படையில், ஜூன் 18, 2024க்கு ஒரு பெரிய கணிப்பு செய்துள்ளார்.

மூன்றாம் உலகப் போர் இன்னும் சில வாரங்களில் தொடங்கலாம் என்று அவர் கணித்துள்ளார். கொரியா, சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற இடங்களில் ராணுவ செயல்பாடு அதிகரிக்கும். இதனுடன், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கும் இடையே போர் தீவிரமாகும் என்றும், இதன் காரணமாக நேட்டோ நாடுகளின் கோபம் அதிகரிக்கும் எனவும் குறிப்புட்டுள்ளார்.

மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் விஸிட் அடித்தார்களா என்ன... வானில் முளைத்த பிரகாசமான தூண்கள்...!

குஷால் குமார் மீடியம் குறித்த தனது பதிவில், 'சில நாடுகளில், பெரும் கவலைக்குரிய சூழ்நிலை உருவாகலாம் என்றும், ஆட்சியாளர்களுக்கு நிலைமையை சமாளிப்பது கடினமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆட்சியில் உள்ள சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம் அல்லது ராஜினாமா செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்லார். அரசியல் சூழ்நிலையில் குழப்பத்தை தவிர்க்க முடியாது. சுருங்கச் சொன்னால், தலைவர் பலவீனமாக இருக்கும் இடத்தில், இராணுவம் முழுக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளலாம் என்று சமகால கிரக நிலைகள் தெரிவிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 18, 2024 செவ்வாயன்று உலகப் போரை -3 தூண்டுவதற்கு வலுவான கிரக நிலை உருவாகும் என்று அவர் கணித்துள்ளார். ஜூன் 10 மற்றும் 29 ஆம் தேதிகளும் மிக முக்கியமான நாட்களாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 'டெய்லி ஸ்டார்' பத்திரிக்கையில் வெளியான செய்தியில், உலகெங்கிலும் உள்ள பதற்றம் நிறைந்த இடங்களில் போர் நிலைமை தீவிரமாகும் என்றும், 2024ம் ஆண்டு மிக கவலைக்குரியதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குஷால் குமார் ஒரு இந்திய ஜோதிடர் ஆவார், அவர் சில உலக நிகழ்வுகளை கணிக்க, அவர் ஜோதிட விளக்கப்படங்களைப் பயன்படுத்துகிறார். கிரகங்கள் மற்றும் நட்சத்திர சீரமைப்புகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், சீனா மற்றும் தைவான், ரஷ்யா மற்றும் நேட்டோ இடையே பதட்டங்கள் அதிகரிக்கும் என்று அவர் முன்பே கணித்திருந்தார்.

நாஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா உட்பட பல ஜோதிடர்கள் மூன்றாம் உலகப் போரை பற்றி குறிப்பிட்டுள்ள நிலையில், அவர்களின் கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய வழியில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கொதிக்கும் பாலைவன மணலில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News