உந்து சக்தியாக வாழும் மகளிருக்கு எனது சமூக ஊடக கணக்குகளை விட்டுகொடுக்கிறேன் -மோடி!

தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசிப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதற்கான விடையினை மக்களுக்கு மற்றொரு ட்விட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Last Updated : Mar 3, 2020, 02:49 PM IST
உந்து சக்தியாக வாழும் மகளிருக்கு எனது சமூக ஊடக கணக்குகளை விட்டுகொடுக்கிறேன் -மோடி! title=

தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசிப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதற்கான விடையினை மக்களுக்கு மற்றொரு ட்விட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம் பிற்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது சமூக ஊடக கணக்குகளான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பின் என எனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசித்து வருகிறேன். மற்றும் அனைவரையும் இடுகையிட வைப்போம்" என்று குறிப்பிட்டார்.

இந்த ஞாயிறு என்பது மார்ச் 8-ஆம் தேதியை குறிக்கிறது. அதாவது மகளிர் தினமான அன்று தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசிப்பதாக தெரிவித்திருந்தார். இதன் மூலம் அவர் மகளிர் தினத்தில் செய்ய இருக்கும் காரியம் குறித்து சூசகமாக தெரிவித்தார் என பலர் நேற்றைய தினமே சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது தனது சூசக பதவிற்கான விடையை மற்றொரு பதிவின் மூலம் பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில்., "இந்த மகளிர் தினத்தில், மற்றவர்களுக்கு உந்து சக்தியாக வாழும் மகளிருக்காக எனது சமூக ஊடக கணக்குகளை விட்டுகொடுக்கிறேன். இந்த நடவடிக்கை மேலும் பல லட்சக்கணக்கான மகளிருக்கு உந்துதல் அளிக்கும். அப்படியான பெண்கள் நீங்கள் என்றால் #SheInspiresUs என்ற ஹேஷ்டேகில் உங்களைபற்றி தெரியப்படுத்துங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அத்தகைய பெண்கள் குறிந்து நீங்கள் வீடியோ எடுத்தும் குறித்த ஹேஷ்டேகுடன் பகிரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது ட்விட்டரில் 53.3 மில்லியன் பின்தொடர்பாளர்களும், பேஸ்புக்கில் 44,722,143 பின்தொடர்பாளர்களும் உள்ளனர். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரதமர் முறையே 35.2 மில்லியன் மற்றும் 4.5 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி தான் தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக பதிவிட்டது, அவரது பின்தொடர்பாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

Trending News