ரஜினி அரசியல் வருகை: கனவு நினைவாகியது ராகவா லாரன்ஸ்!

நடிகர் ரஜினிகாந்த் இன்று நான் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததை தொடர்ந்து, நடிகர் ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி!

Last Updated : Dec 31, 2017, 01:46 PM IST
ரஜினி அரசியல் வருகை: கனவு நினைவாகியது ராகவா லாரன்ஸ்! title=

நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை கடந்த 26-ம் தேதியில் இருந்து சந்தித்து வருகிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அரசியலுக்கு வருவதாகவும் ரசிகர்களிடம் தெரிவித்தார்.  

இதையடுத்து, அவர் அரசியல் களத்தில் இறங்குவேனா இல்லையா? என்பது பற்றி இன்று அதாவது, 31.12.2018 அதாவது அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். 

இதை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று புதிய ஆல்பம் ஒன்றை youtube-ல் வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது. 

இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் கனவை மெய்யாக்கும் வகையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த தகவலை கேள்விப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டரில் கூறியுள்ளது: தலைவா நன்றி..! எங்கள் கனவை நினைவாக்கினாய், வரசொன்னோம் வந்துவிட்டாய். இனி  நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்.அனைத்து தலைவர் ரசிகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி....! என்று தெரிவித்திருந்தார். 

 

Trending News