அசாருதின் மகனை மணந்தார் சானியா மிர்சாவின் சகோதரி...

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா-விற்கும், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் மொகமது அசாருதின் மகன் ஆசத்திற்கும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது!

Last Updated : Dec 12, 2019, 01:02 PM IST
அசாருதின் மகனை மணந்தார் சானியா மிர்சாவின் சகோதரி... title=

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா-விற்கும், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் மொகமது அசாருதின் மகன் ஆசத்திற்கும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது!

இரு வீட்டார், உறவினர்கள் முன்னிலையில் இந்த ஜோடிக்கு திருமணம் இனிதே முடிவடைந்தது. இந்நிலையில் திருமண நிகழ்வின் முதல் புகைப்படத்தினை தற்போது அனம் மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "Mr and Mrs." என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

அனம் மற்றும் ஆசத் சில மாதங்களுக்கு முன்பு தங்களது திருமணத்தை உறுதி செய்தனர். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், தனது சகோதரியின் திருமணம் குறித்து குறிப்புகளை பகிர்ந்திருந்தார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Mr and Mrs   #alhamdulillahforeverything #AbBasAnamHi   @weddingsbykishor @daaemi

A post shared by Anam Mirza (@anammirzaaa) on

திருமணம் ஆனது வட இந்திய கலாச்சாரத்தில் நடைப்பெற்றது. திருமணத்திற்கு முன்பு நடைபெறும் சடங்களுகளான சங்கீத் மற்றும் மெஹந்தி நிகழ்வுகள் பெற்றோர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்றது. சானியா மிர்சா தனது சகோதரிக்கு துணை பெண்ணாக நின்று நிகழ்சிகளை நடத்தி முடித்தார்.

மெஹந்தி பண்டிகையின் போது சானியா பர்பல் நிறத்தில் பாரம்பரிய உடை அணிந்திருந்தார். மேலும் நிகழ்ச்சிகளின் போது தனது மகன் ஆஜாம் உடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். முன்னதாக, சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சௌயிப் மாலிக்கினை காதல் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.... 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

My happines 

A post shared by Sania Mirza (@mirzasaniar) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

My happin 

A post shared by Sania Mirza (@mirzasaniar) on

Trending News