Shivani Narayanan: டிவிட்டரில் டிரெண்டாகும் கிளாமர் அழகி ஷிவானி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே 2 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டிருந்தார் நடிகை ஷிவானி நாராயணன்

Written by - ZEE Bureau | Last Updated : Aug 8, 2021, 01:32 PM IST
Shivani Narayanan: டிவிட்டரில் டிரெண்டாகும் கிளாமர் அழகி ஷிவானி

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் நடிகை ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) வீடியோ மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

ALSO READ | குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம், வைரலாகும் வீடியோ

தற்போது இவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் பயங்கரமாக வைரலானது. அதற்கு முன்னதாக ரெய்னாவுடன் புகைப்படம் எடுத்தும் இவர் வைரலானார்.

இந்நிலையில் தற்போது திடீரென அவரது #ShivaniNarayanan ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே 2 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டிருந்த நடிகை ஷிவானி நாராயணன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை மீண்டும் பதிவிட்டு 3 மில்லியன் ஃபாலோயர்களை தனது இன்ஸ்டாகிராம் குடும்பத்தில் இணைத்துள்ளார். அதன் காரணமாகவே தற்போது ஷிவானி நாராயணனின் ஹாஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளது. 

ALSO READ | Viral Dance video: ஓமன குட்டியாக மாறிய பிக்பாஸ் பிரபலம்: வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News