ஹலோ நான் பாம்பு வந்திருக்கேன்: தூங்கும் நபரை எழுப்பும் பாம்பு, வைரல் வீடியோ

Scary Snake Video: பாம்பு வீடியோக்கள் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகொன்றன. தற்போது பரவி வரும் ஒரு வீடியோவும் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2022, 01:02 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
  • படுக்கையில் பாம்பு கிளப்பும் பீதியின் வீடியோவை இங்கே காணலாம்.
ஹலோ நான் பாம்பு வந்திருக்கேன்: தூங்கும் நபரை எழுப்பும் பாம்பு, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இணையத்தில் மலைப்பாம்பு, ராஜநாகம் மற்றும் பிற ஆபத்தான பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் அதிகம் பதிவேற்றப்படுகின்றன. இந்த வீடியோக்கள் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகொன்றன. தற்போது பரவி வரும் ஒரு வீடியோவும் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | சாவகாசமாய் அமர்ந்துகொண்டு கார்ட்டூன் பார்க்கும் பூனைக்குட்டிகள்! 

இது மஞ்சள் நிற ராட்சத பாம்பு தொடர்பான வீடியோவாகும். இந்த வீடியோ வெளிவந்த உடனேயே ஒரு லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களையும் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது. 

படுக்கையில் திடீரென வந்த பாம்பு 

வெளியான வீடியோவில், ஒருவர் படுக்கையில் வசதியாக தூங்க்கிகொண்டிருப்பதை காண முடிகின்றது. அப்போது, சுமார் பதினைந்து அடி நீளமுள்ள மஞ்சள் நிற பாம்பு ஒன்றும் படுக்கையின் மீது ஏறுகிறது. ஆனால், அந்த நபர் எந்த சலனமும் இன்றி நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறார். பாம்பு மெதுவாக அவரை நோக்கி நகர்கிறது. 

அதன் பிறகு வீடியோவில் நடக்கும் விஷயத்தை யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். படுக்கையில் ஏறிய பிறகு, ராட்சத பாம்பு நேரடியாக நபரின் கழுத்தை அடைந்து அங்கும் இங்கும் பார்க்கத் தொடங்கியது. ஆனால், அந்த பாம்பு அந்த நபருக்கு தீங்கு விளைவிக்கவில்லை. ஆனால், இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் பீதி ஏற்படுகிறது. 

படுக்கையில் பாம்பு கிளப்பும் பீதியின் வீடியோவை இங்கே காணலாம்:

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ snakebytestv என்ற பக்கத்தில் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாம்புகள் மற்றும் பிற ஆபத்தான உயிரினங்கள் தொடர்பான காணொளிகள் பொதுவாக இந்த கணக்கில்  பதிவேற்றப்படும். இவை இணையத்தில் பதிவேற்றப்பட்டவுடனேயே சலசலப்பை உருவாக்கும்.

பாம்பை பார்த்தால் பலசாலிகளும் நடுங்குவார்கள். பாம்பிடமிருந்து விலகி இருக்கவே அனைவரும் ஆசைப்படுவதுண்டு. ஏனென்றால், பாம்பு எப்போது எப்படி நடந்துகொள்ளும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆகையால் பாம்புகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என்றே பலரும் நினைப்பதுண்டு. இருப்பினும், ஆபத்தான மற்றும் விஷ விலங்குகளுக்கு மத்தியில் வாழவும், அவற்றுக்கு நெருக்கமாக இருக்கவும் சிலர் விரும்புகிறார்கள். சிலர் விஷப்பாம்புகளுக்கும் அஞ்சுவதில்லை. 

மேலும் படிக்க | ஹலோ கொஞ்சம் தள்ளுங்க, நான் சாப்பிடணும்: பூனைகளிடம் மாஸ் காட்டிய எலி, வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News