என்னாது!... கவர்ச்சி புயர் ஸ்ரீரெட்டி அகோரியா மாறிட்டாங்களா...?

சிவன் பக்தையாக நடிகை ஸ்ரீரெட்டி நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated: Feb 23, 2020, 05:53 PM IST
என்னாது!... கவர்ச்சி புயர் ஸ்ரீரெட்டி அகோரியா மாறிட்டாங்களா...?

சிவன் பக்தையாக நடிகை ஸ்ரீரெட்டி நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு அளிப்பதாகச் சொல்லி, தன்னை படுக்கைக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என, தெலுங்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதெல்லாம் புகார் அளித்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னுடைய குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, தெலுங்கு நடிகர் சங்கம் முன், அரை நிர்வாண போராட்டமும் நடத்தியவர். இதனைத்தொடர்ந்து தமிழ் திரைப்பட உலகம் பக்கம் திரும்பினார். 

இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் என பலர் எனக்கு வாய்ப்புத் தருவாதச் கூறி தன்னை படுக்கை அறைக்கு அழைத்ததாக பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார். 

இது பரபரப்பாக இருக்கும்போதே, நடிகர் ராகவா லாரன்ஸ், ஸ்ரீ ரெட்டிக்கு தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறினார். இதனையடுத்து ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கும் குடிபெயர்ந்தார்  ஸ்ரீரெட்டி, எனினும் இவருக்கு இதுவரை படவாய்ப்பு கிடைத்தாக தெரியவில்லை.

எனினும் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது சினிமா பிரபலங்களை வருத்தெடுத்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் முன்னணி நடிகர் விஷாலை குறிவைத்து தனது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். விஷால் படங்களில் நடிக்க வேண்டும் என்றால், எந்தப் பெண்ணும் அவரோடு படுத்துத்தான் ஆக வேண்டும். இதை இன்றும் சொல்வேன்; என்றும் சொல்வேன். எங்கு வந்து வேண்டுமானும் சொல்வேன். என்னை அழித்தாலும் சரி... அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை என பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து தயாரிப்பாளர் ஒருவருடன் எற்பட்ட தகறாரில் சிறுது காலம் அமைதி காத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் இணையத்தை அதிர வைக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது சிவன் பக்தையாக, ஒரு அகோரி வேடம் இட்டு அவர் நடித்துள்ள பாடல் வீடியோவின் மூலம் தற்போது மீண்டும் இணையவாசிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நடிகை ரெட்டி வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து அவர் குறிப்பிடுகையில்., சிவன் மேல் உள்ள காதலால் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளதாக கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் சிவபெருமான் போலவும் சிவ பக்தராகவும் வேடம் அணிந்து நடித்துள்ளார். சில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.