சூர்யா-ன் 37வது படத்தில் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார்!!

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் இருக்கும் படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Last Updated : May 11, 2018, 10:34 AM IST
சூர்யா-ன் 37வது படத்தில் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார்!!

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் இருக்கும் படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். 

தற்போது இந்த படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். சூர்யாவுக்கு இந்த படம் 37-வது படமாகும். 

இந்நிலையில் இப்படத்தில் மோகன்லால் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை கே.வி.ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஏற்கனவே விஜய்யின் ஜில்லா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News