புதுடெல்லி: சமூக ஊடகங்களில் வெளியாகும் ‘தி ஓமிக்ரான் வேரியண்ட்’ திரைப்பட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையானதல்ல என்றும் கூறப்படுகிறது. ‘தி ஓமிக்ரான் வேரியண்ட்’ என்ற பெயரில் 1960ஆம் ஆண்டிலேயே திரைப்படம் வெளியாகியிருப்பதாக கூறும் போஸ்டர்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.
உலக சுகாதார அமைப்பு புதிய SARS-CoV-2 மாறுபாடு B.1.1.529 ஐ "கவலைக்குரிய கொரோனா பிறழ்வு" என்று அறிவித்துள்ளது. இந்த கொரோனாவின் வகைக்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று நவம்பர் 24 அன்று தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு உலக சுகாதார அமைப்புக்கு (World Health Organisation) தெரிவித்தது.
அதையடுத்து, உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொடர்பான அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகளும் பயணத்தடை, பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், டிசம்பர் 2 ஆம் தேதி, பல சமூக ஊடக பயனர்கள் 'தி ஓமிக்ரான் வேரியண்ட்' என்ற தலைப்பில் ஒரு திரைப்பட போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர். பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
Believe it or faint ..This film came In 1963 ..Check the tagline pic.twitter.com/ntwCEcPMnN
— Ram Gopal Varma (@RGVzoomin) December 2, 2021
நடிகர் கௌதம் ரோட் மற்றும் கிறிஸ்தவ-பழமைவாத கார்மைன் சபியாவும் இதைப் பகிர்ந்துள்ளனர். இதே திரைப்படத்திற்கு மற்றொரு போஸ்டர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ட்விட்டர் பயனர் கிறிஸ்டோபர் மில்லர் அதை பதிவிட்டுள்ளார். அதை உடனடியாக 1,000 பேர் மீண்டும் பதிவிட்டு பகிர்ந்துள்ளனர்.
ALSO READ | இது விண்ணிலா அல்லது கடலிலா? வைரலாகும் நாசாவின் வீடியோ
உண்மை சரிபார்ப்பு (fact check)
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் (Social Media) பரபரப்பு நிலவும் நிலையில், இப்படி ஒரு திரைப்படம் வெளியானதா அல்லது திரைப்படம் எடுப்பதற்கான முயற்சியாவது எடுக்கப்பட்டதா என்பதை அறிந்துக் கொள்ள உண்மை சரிபார்ப்பு சோதனை செய்து பார்த்ததில் ‘தி ஓமிக்ரான் வேரியண்ட்’ என்ற பெயரில் எந்தப் படமும் இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால், 1963 ஆம் ஆண்டு 'ஓமிக்ரான்' என்ற அறிவியல் புனைகதை திரைப்படம் உள்ளது. பூமியில் வசிக்கும் மனிதனின் உடலைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, வேற்றுகிரகவாசி மனிதனின் உடலை எடுத்துச் செல்கிறார் என்று அந்த திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது.
இந்திய திரைப்பட பிரபலமான ராம் கோபால் வர்மா தி ஒமிக்ரான் வேரியண்ட் என்ற திரைப்படம் 1960ஆம் ஆண்டிலேயே உருவானதாக போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதை பலரும் பகிர்ந்துள்ளனர். இந்த போஸ்டரைப் பகிர்ந்த அயர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் பெக்கி சீட்டில் இதை உருவாக்கினார். அவர் மூன்று படங்களை வெளியிட்டு, "நான் 70களின் அறிவியல் புனைகதை திரைப்பட சுவரொட்டிகளில் "தி ஓமிக்ரான் மாறுபாடு" என்ற சொற்றொடரை போட்டோஷாப் செய்தேன் #Omicron" என்று எழுதினார்.
1974 ஆம் ஆண்டு வெளியான ‘ஃபேஸ் IV’ திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு சாட்டெல் தயாரித்த போஸ்டர் இது. “பாலைவன எறும்புகள் திடீரென்று ஒரு கூட்டு நுண்ணறிவை உருவாக்கி, மக்கள் மீது போர் தொடுக்கத் தொடங்குகின்றன. எறும்புகளை அழிப்பதற்காக இரண்டு விஞ்ஞானிகள் மற்றும் ஒரு பெண் சேர்ந்து பணிபுரிகிறார்கள். இந்த இரண்டு சுவரொட்டிகளிலும் ஒரே மாதிரியான கை மற்றும் நடிகர்களின் பெயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
The Omicron Variant sounds like a 60’s sci-fi movie pic.twitter.com/CAAZJaRtqm
— Christopher Miller (@chrizmillr) November 27, 2021
மில்லர் பகிர்ந்த இந்த போஸ்டர், முதல் படத்தைப் போலவே, மற்றொரு திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது - 1966 திரைப்படமான 'சைபோர்க் 2087'.
பல சமூக ஊடக பயனர்கள் கற்பனையான இந்த திரைப்பட சுவரொட்டிகளை 1960 களில் ‘தி ஓமிக்ரான் வேரியண்ட்’ என்ற பெயரில் திரைப்படம் வெளியானதாகவும், SARS-CoV-2 இன் ஓமிக்ரான் மாறுபாட்டை, அந்த திரைப்படம் அப்போதே கணித்ததாகவும் பதிவிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் அப்படி ஒரு திரைப்படம் வெளியாகவே இல்லை.
ALSO READ | நடனமாடும் விண்மீன் திரள்கள்; நாசாவின் புகைப்படம் வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR