Video: திருட்டுக்கு மத்தியில் ஜாலியாக நடனமாடும் திருடன்!

திருடர்கள் என்றால் திருடுவதற்கு முன்னதாக திருட்டிற்கான திட்டம் தீட்டுவார்கள், எப்படி தப்பிப்பது என்று யோசிப்பார்கள்... ஆனால் திருடுவதற்கு முன்பாக ஜாலியாக நடமாடிய திருடன் இங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Last Updated : Jul 12, 2018, 12:35 AM IST
Video: திருட்டுக்கு மத்தியில் ஜாலியாக நடனமாடும் திருடன்! title=

திருடர்கள் என்றால் திருடுவதற்கு முன்னதாக திருட்டிற்கான திட்டம் தீட்டுவார்கள், எப்படி தப்பிப்பது என்று யோசிப்பார்கள்... ஆனால் திருடுவதற்கு முன்பாக ஜாலியாக நடமாடிய திருடன் இங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

புதுடெல்லியில் கடந்த செவ்வாய் அன்று நடைப்பெற்ற திருட்டு சம்பவத்தில் பல லட்சம் ரூபாய் திருடு போனது. இந்த திருட்டு சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினருக்கு அருகில் இருக்கும் கடை CCTV கேமிரா காட்சிகள் கிடைத்துள்ளது.

இந்த வீடியோ காட்சியில் மேற்குறிப்பிடப்பட்ட திருட்டுச் சம்பவத்தில் ஈடுப்பட்ட திருடர்களின் அடையாளங்கள் சிக்கியுள்ளது. இதில் விந்தை என்னவென்றால் திருட வந்த திருடர்கள் ஜாலியா நடனமாடி கொண்டு இருக்கும் வீடியோவும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 3 நபர் கொண்ட குழு இந்த திருட்டில் ஈடுப்பட்டுள்ளது, திருட்டில் ஈடுபடுவதற்கு முன்னதாக குழுவில் இருக்கும் ஒரு திருடன் அருமையாக நடனமாடுகின்றார், அதன் பின்னரே திருடப்பட்ட கடையின் கதவினை உடைக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணைத்தில் வைரலாக பரவி வருகின்றது.

முன்னதாக கோவையில் திருடன் ஒருவன் பல்பினை திருட உடற்பயிற்சி செய்வது போல் பாவனைகள் செய்து தெருவில் இருந்த பல்பினை திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது, அந்த வகையில் தற்போது நடனமாடும் திருடனின் வீடியோவும் ஹிட் அடித்து வருகின்றது. 

Trending News