’வச்சக்குறி தப்பாது’ காட்டுப்பன்றியை வேட்டையாடும் புலி.! - Viral Video

ராஜஸ்தான் தேசிய பூங்காவில் காட்டுப்பன்றியை துரத்திச் சென்று புலி வேட்டையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 19, 2023, 09:07 PM IST
  • காட்டுப்பன்றியை தாக்கும் புலி
  • தப்பிக்க கடுமையான போராட்டம்
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
’வச்சக்குறி தப்பாது’ காட்டுப்பன்றியை வேட்டையாடும் புலி.! - Viral Video title=

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் புகைப்படக் கலைஞர் எம்.டி. பராஷர் என்பவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். சுமார் 20 வினாடிகள் நீடிக்கும் இந்த வீடியோவில், ஒரு புலி காட்டுப் பன்றியுடன் சண்டையிடுகிறது. மரங்களுக்கு இடையே நடைபெறும் இந்த போராட்டத்தில் இரையை விடக்கூடாது என புலியும், புலியிடம் தப்பித்துவிட வேண்டும் என பன்றியும் போராடுகின்றன. 

ALSO READ | 'முடிஞ்சா தொட்டுப்பார்.....' என பாம்பை பதறவைத்த கோழியின் வைரல் வீடியோ

செவ்வாய்க்கிழமை காலை எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், புலியானது பன்றியின் கழுத்தை இறுகப்பிடித்து அதனை தப்பவிடாமல் இருப்பதற்கான அனைத்து தாக்குதல்களையும் தொடுக்கிறது. பன்றியும் உருமிறியவாறு புலியின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. கடைசியில் புலிக்கு பன்றி இரையானதாக கூறப்படுகிறது. அந்தக் காட்டுப்பன்றியை தாக்கிய புலியின் பெயர் நூர். 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பல குட்டிகளை ஈன்ற நூர், அழிந்து வரும் விலங்குகளுக்கான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியனின் (IUCN) பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.  

புலியிடம் சிக்கிய அந்தப் பன்றியானது, இந்திய காட்டுப்பன்றி இனமாகும். ஐரோப்பிய பன்றிகளுடன் ஒப்பிடும்போது பெரிய மண்டை ஓடுகள் மற்றும் சிறிய காதுகளை கொண்டிருக்கும். இந்தியாவைப் பொறுத்த வரை புலியின் முக்கிய இரையாக காட்டுப்பன்றிகள் இருக்கின்றன. 'புராஜெக்ட் டைகர்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திய பிறகு இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சுமார் 2,967 புலிகள் இப்போது இந்தியாவில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஒப்பிடும்போது, நான்கில் ஒரு பங்கு புலிகள் இந்தியாவில் மட்டுமே உள்ளன.

ALSO READ | விஷப்பாம்புடன் விளையாடிய பிஞ்சு குழந்தை - வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News