அப்போ நா பாசமில்லையா.. பொறாமையில் சண்டைபோட்ட பூனை!

பூனை ஒன்று அதன் உரிமையாளரிடம் மற்றொரு பூனை உரிமை எடுத்துக்கொண்டு கொஞ்சுவதை கண்டு பொறாமையில் சண்டையிடும் ஒரு அழகான காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 29, 2022, 02:36 PM IST
  • ஓனரின் மடியில் படுத்து தூங்கும் பூனை.
  • நான்தான் படுப்பேன் என சண்டையிடும் மற்றொரு பூனை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
அப்போ நா பாசமில்லையா.. பொறாமையில் சண்டைபோட்ட பூனை! title=

நாம் இதுவரையில் இணையத்தில் கண்டுகளித்த வீடியோக்களில் விலங்குகள் செய்யும் பல செயல்கள் மனிதர்கள் செய்யும் செயல்களை போலவே தான் இருக்கின்றது, பிடிவாதம், கோபம் என பலவகையான உணர்ச்சிகளை மனிதர்கள் எவ்வாறு வெளிப்படுத்துவார்களோ அதனைப்போலவே விலங்குகளும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.  இப்போது நாம் காணப்போகும் வீடியோவும் அப்படித்தான், நமக்கு பிடித்தமானவர்களிடம் வேறொருவர் வந்து நெருக்கமாக இருந்தால் நமக்கு எவ்வளவு கோபம் வருமோ அப்படிதான் இங்கு ஒரு பூனைக்கும் கோபம் வந்து சண்டை போடுகிறது.  இந்த காட்சி நெட்டிசன்கள் பலரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | பல் தேய்க்கும்போது இந்த பந்தா தேவையா? பாம்புடன் சிறுமி அடிக்கும் லூட்டி, வைரல் வீடியோ 

பூனையின் கோபத்தை காட்டும் இந்த வீடியோவானது ட்விட்டரில் Animales y bichitos என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில் சோஃபா மீது ஒருவர் அமர்ந்து இருப்பதையும், அவர் அருகில் ஒரு குட்டி பூனை இருப்பதையும் மற்றும் தரையில் ஒரு பெரிய பூனை அமர்ந்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.  சோஃபாவின் மீது இருந்த பூனைக்குட்டியானது மெதுவாக நடந்து வந்து அமர்ந்திருக்கும் நபரின் கையிலுள்ள உணவை சாப்பிட வருகிறது, அந்த நபர் விளையாட்டாக உணவுத்தட்டை தூரமாக தள்ளிக்கொண்டே செல்கிறார்.  குட்டி பூனை அவரை நெருங்குவதை கண்ட ஆந்த பெரிய பூனை உடனே அந்த பூனையை தாக்க தொடங்கிவிடுகிறது, அந்த குட்டிப்பூனை பயந்து பம்மிக்கொண்டு இருக்க பெரிய பூனை கடுப்பில் அமர்வதுடன் வீடியோ நிறைவடைகிறது.

பெரிய பூனையின் இந்த செயல் சிரிப்பை வரவழைத்துள்ளது அதேசமயம் குட்டிப்பூனையை பார்ப்பதற்கும் பாவமாக தெரிகிறது.  கடந்த 22ம் தேதியன்று ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவானது இதுவரை முப்பத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News