Viral Video: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
இந்த உலகில் விலைமதிப்பற்ற விஷயங்களில் தாயன்பும் ஒன்று. தாயன்பிற்கு ஈடு இணையே கிடையாது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல விஷயங்களை செய்கிறார். குழந்தைகளின் நலனுக்கான அவர் அனைத்து வித இன்னல்களையும், துக்கங்களையும், வலிகளையும் தாங்கிக்கொள்கிறார். தன் குழந்தையை எந்த தீங்கும் தீண்டாமல் பார்த்துக்கொள்வதில் தாயை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது.
தாயன்பு என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல. விலங்குகளுக்கு இடையிலும் இதே அளவு தாயன்பை காண முடியும். பறவைகள், விலங்குகள் என அனைத்தும் தங்கள் முட்டைகள், குஞ்சுகள் ஆகியவற்றை மிக பத்திரமாக பார்த்துக்கொள்வதை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். தற்போதும் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இது பழைய வீடியோதான் என்றாலும், தற்போது இது மீண்டும் வைரல் ஆகி வருகின்றது.
ஒரு எலி தன் குட்டியை பாம்பிடமிருந்து காப்பாற்றும் வீடியோதான் இது. தன் குட்டியை காப்பாற்ற தாய் எலி ஒரு பெரிய பாம்புடன் போராடுகிறது. இறுதியில் என்ன நடந்தது? சிறிய எலியால் பாம்பை தோற்கடிக்க முடிந்ததா? பாம்பின் பலம் வென்றதா அல்லது எலியின் தாய்ப்பாசம் வெற்றி பெற்றதா? வீடியோ பார்ப்பவரின் நெஞ்சில் இந்த அனைத்து கேள்விகளும் எழும். பார்ப்பவர்களை இறுதி வரை பார்க்க வைப்பதில் இந்த வீடியோ வெற்றி பெறுகிறது என்றுதான் கூற வேண்டும்.
மேலும் படிக்க | மாட்டு சாணியை ஜாம் போல தடவி சாப்பிடும் நபர்! பார்த்தாலே வாந்தி வருது..வைரல் வீடியோ
ஒரு சாலையில், பெரிய பாம்பு ஒன்று ஒரு எலி குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வேகமாக செல்கிறது. தனது குட்டி எலியைக் காப்பாற்ற, தாய் எலி, பாம்பின் வாலை தாக்குகிறது. அந்த எலி பாம்பின் வாலை கடித்து அதை படுத்துகிறது. எலியின் உருவத்தையும் பாம்பின் உருவத்தையும் பார்த்த அனைவருக்கும், அந்த எலியால் ஒன்றும் செய்ய முடியாது, பாம்பு குட்டி எலியை தின்றுவிடும் என்றே தோன்றும். ஆனால் அங்குதான் ட்விஸ்ட் காத்திருக்கிறது.
பாம்பை தாய் எலி தொடர்ந்து தாக்குகிறது. தாய் எலியின் உறுதிக்கு முன்னால் பாம்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, குட்டி எலியை விட்டுவிட்டு, பாம்பு திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடிக்கின்றது. ஆனால், அப்போதும் தாய் எலி விடவில்லை. அது கடைசி வரை அந்த பாம்பை துரத்துகிறது. பாம்பு அங்கிருந்து சென்றது உறுதியானதும், அது தன் குழந்தையிடம் வந்து அதை வாயில் கவ்விக்கொண்டு தன் பொந்தை நோக்கி செல்கிறது. இந்த சம்பவம் பார்ப்பதற்கு மிக நெகிழ்வாக உள்ளது.
இணையவாசிகளை உருக வைத்த அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
Rodent fights snake to get baby backpic.twitter.com/MlN8v5xpTz
இந்த வீடியோ தற்போது சமூக ஊடக தளமான X -இல் NATURE IS BRUTAL என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
"தாயின் அன்பையும் அக்கறையையும் விட இந்த உலகில் எதுவும் பெரியது இல்லை." என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இந்த வீடியோ சிலிர்ப்பூட்டுகிறது” என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | காதலியுடன் பேசிக்கொண்டே குழி தோண்டிய இளைஞர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ