போபால்: சில சமயங்களில் திரைப்படங்களில் மட்டுமே நாம் காணும் காட்சிகள் நிஜ வாழ்க்கையிலும் அரங்கேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தின் போபாலில் (Bhopal) நடந்துள்ளது. ஒரு திருமணமான பெண் தனது கணவன் அவருடைய காதலியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
விவாகரத்தான பெண் தனது கணவருடனான 3 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார். தனது கணவர் காதலிக்கும் பெண்ணுடன் அவர் சேர்ந்து வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்பதற்காக அவர் இந்த விவாகரத்தை (Divorce) அளித்தார் என கூறப்படுகிறது.
தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற நபரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அந்த நபருக்கு தன் காதலி தன் மனைவி என இருவரிடமும் காதல் இருந்தது என தெரிவித்தார். ஆனால் இரண்டு மனைவிகள் இருப்பது சட்டவிரோதமானது என்பதால், அவரது மனைவி இந்த முடிவை எடுத்தார் என வழக்கறிஞர் கூறினார்.
Bhopal: After 3 years of marriage, wife helps husband get married to his girlfriend.
"He wanted to be in marital relationship with both which isn't legally possible. But the wife is very mature, she divorced him & helped him marry his girlfriend," says lawyer.#MadhyaPradesh pic.twitter.com/hT5SKouMip
— ANI (@ANI) November 7, 2020
“அவர் இருவருடனும் திருமண உறவில் இருக்க விரும்பினார். ஆனால் சட்டபூர்வமாக அது சாத்தியமில்லை. ஆகையால், மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் முதிர்ச்சியுடனும் முடிவெடுத்த அவரது மனைவி அவரை விவாகரத்து செய்தார். மேலும் தனது கணவன் தன் காதலியை திருமணம் செய்துகொள்ளவும் அவருக்கு உதவினார்.” என்று வழக்கறிஞர் கூறினார்.
ட்விட்டரில் (Twitter) பலர் அந்தப் பெண்ணின் தியாகத்தை பாராட்டியதோடு, அத்தகைய நிலைக்கு அவரைத் தள்ளிய அவர் கணவரை விமர்சித்தனர்.
ஒரு பயனர், “மிகவும் உணர்ச்சியற்ற மனிதர் .. அவருக்கு ஒரு காதலி இருந்தால் அவர் ஏன் மற்றொரு பெண்ணை மணந்தார் ..? அந்த காதலி விரைவில் அவரை வெளியேற்ற வேண்டும் ... அந்த தைரியமான பெண்ணுக்கு விரைவில் ஒரு அன்பான, அக்கறை காட்டும் கணவர் கிடைப்பார் என்று நம்புகிறேன்" என்று எழுதினார்.
An extremely insensitive man..
Why did he marry another woman if he had a gf..?
Gf should also kick him out soon... Karma will catch upHope the brave woman gets a new husband who is loving caring and faithful
— शून्य (@shiprabahri) November 7, 2020
Sensible thing to do instead of being revengeful and spoiling three lives
— Dr Khushboo(@khushbookadri) November 7, 2020
When we talk about women breaking the patriarchy, we mean this. Hats off to such women
— Jitesh Rochlani (@JRism99) November 7, 2020
ALSO READ: காதல் தோல்வியால் இவர் தாடி வைக்கவில்லை, தன்னைத்தானே மணந்து கொண்டார்: Viral ஆகும் pics!!