நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும்: வைரல் ஆன பாஜக தலைவர் ட்வீட்

அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் வானதி சீனிவாசன் கிண்டலாக பதிலளித்தார். வானதி சீனிவாசன் அளித்த இந்த கிண்டலான பதில் ட்வீட் இப்போது வைரலாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2021, 04:45 PM IST
  • வலிமை படத்தின் அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்.
    அஜித் ரசிகர்களுக்கு வேடிக்கையாக பதில் அளித்தார் வானதி சீனிவாசன்.
    வானதி சீனிவாசன் அளித்த ட்வீட் சமூக ஊடகஙைல் வைரல்.
நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும்: வைரல் ஆன பாஜக தலைவர் ட்வீட் title=

சமீப காலங்களில் தல அஜித்தின் ரசிகர்கள் பார்ப்பவர்களையெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். வலிமை படக்குழு படத்தின் எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். 
சமீபத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியின் போது, அஜித்தின் (Ajith) ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் குறித்து இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரரிடம் கேட்டனர். இதைத் தொடர்ந்து அரசியல் அல்லது விளையாட்டு வீரர்களிடம் தனது படத்தின் அப்டேட் குறித்து கேட்க வேண்டாம் என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களை ஒரு செய்தி வெளியீட்டின் மூலம் கேட்டுக்கொண்டார்.

எனினும், தற்போது  ஒரு ரசிகர் பாஜக தலைவர் வானதி சீனிவாசனிடம் வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்டுள்ளார். 

ALSO READ: Legend Saravanan படத்தின் கதாநாயகி இவர்தான்: விரைவில் வெளிவருகிறது படம்!!

பாஜக-வின் (BJP) வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் இருந்து இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் இதே தொகுதியில் இருந்துதான் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் குறித்து கேட்ட கேள்விக்கு ட்விட்டரில் வானதி சீனிவாசன் கிண்டலாக பதிலளித்தார். வானதி சீனிவாசன் அளித்த இந்த கிண்டலான பதில் ட்வீட் இப்போது வைரலாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலை (TN Assembly Election) எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் வெவ்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைக்கும் முற்றிலும் ஒத்துவராத வகையிலும், சாத்தியமற்றவையாகவும் உள்ளன. 

ALSO READ: தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல்..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News