‘மேற்குத் தொடர்ச்சி மலை’ 1-நிமிட Sneak Peek Video வெளியானது!

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் ஒரு நிமிட காட்சியினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Written by - Mukesh M | Last Updated : Aug 21, 2018, 02:48 PM IST
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ 1-நிமிட Sneak Peek Video வெளியானது! title=

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் ஒரு நிமிட காட்சியினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. புதுமுக இயக்குநர் லெனின் பாரதி இப்டத்தை இயக்க தேனி அந்தோணி ராஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் காயத்ரி கிருஷ்ணா, அபு வலையன்குளம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்தினை குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்று பதிவிட்ட விஜய் சேதுபதி அவர்கள்... "இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்க்கை மூலமா, வாழ்வியல் மூலமா படம் சொல்லப்பட்டிருக்கிறது. படம் ரொம்ப அழகா வந்துருக்கு. என்ன பொறுத்தவரை இந்த மாதிரி ஒரு படம் பண்ணுனதுல ஆத்ம திருப்தியோட இருக்கேன். மன நிறைவோட இருக்கேன். அதுக்கு லெனினுக்கு தான் நன்றி சொல்லனும். இந்தப் படத்தோட கதையை கேட்டு பணிபுரிய முன்வந்த இசைஞானி இளையராவுக்கும் நன்றி. நான் ஒரு நல்லப் படம் எடுத்திருக்கேனு நம்புறேன். எல்லோரும் திரைக்கு வந்து இப்படத்தை பாக்கணும்." என குறிப்பிட்டு இருந்தார்.

வரும் ஆகஸ்ட் 24-ஆம் நாள் இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் ஒரு நிமிட வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Trending News