புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியை காண வேண்டும் என உலக கிரிக்கெட் ரசிகர்கள் 4 ஆண்டுகள் காத்திருக்கிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது இருநாட்டு வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்சர், பவுண்டரி மற்றும் விக்கெட்டுக்கு ரசிகர்கள் செய்யும் ஆரவாரம், கொண்டாட்டம் பார்ப்பதற்கு அருமையாகவும் அற்ப்புதமாகவும் இருக்கம். தற்போது ஒரு ரொமான்ஸ் வீடியோ அதைவிட அதிகமாகவே சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடங்களில் வைரலாகி வரும், இந்த வீடியோவில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்கிறது. அப்பொழுது ஒரு நபர் மைதானத்தில் ஒரு பெண்ணிடம் தனது காதலை முன்மொழிவதை நீங்கள் காணலாம். இந்த வீடியோவைப் பார்ப்பதன் மூலம், நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள முடியும், தன்னிடம் காதலை சொன்ன நபரை, அந்த பெண் யாரென்று அறிந்திருக்கவில்லை.
வீடியோ:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 2019 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.