சிறுத்தையை சித்திரவதை செய்த மனித மிருகம்: பதறிய நெட்டிசங்கள்

Leopard Viral Video: சிறுத்தையின் வாலையும் கால்களையும் பிடித்து இழுத்துச் செல்லும் ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 19, 2022, 03:24 PM IST
  • சிறுத்தை வைரல் வீடியோ
  • சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
  • இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சிறுத்தையை சித்திரவதை செய்த மனித மிருகம்: பதறிய நெட்டிசங்கள் title=

சிறுத்தையின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் தினமும் பல வகையான வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. கற்பனை செய்யவே முடியாத சில காட்சிகளை இவற்றில் காண்கிறோம். இணையத்தில் வெளியாகும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீப கலாங்களில் இவை பட்டையை கிளப்பி வருகின்றன. நாம் அருகில் நின்று காண முடியாத சில அரிய காட்சிகளை இந்த வீடியோக்களில் காண முடிகின்றது. தற்போது சிறுத்தை தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது. 

பொதுவாக சிறுத்தையை பார்த்தாலே மக்கள் ஓடுவது வழக்கம், ஏனெனில் சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்கி இரையாக ஆக்கும், ஆனால் இங்கு ஒரு நபர் சிறுத்தையின் வாலைப் பிடித்து ஈவிரக்கமின்றி இழுப்பதைப் பார்த்தீர்களா? ஆம் இங்கே ஒரு நபர் சிறுத்தையின் வால் மற்றும் கால்களைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சியை நீங்கள் பார்க்கலாம். இந்த  வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் அளவில் வைரலாகி வருகிறது, அதே நேரத்தில் சிறுத்தை அந்த நபரின் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க கடுமையாக முயற்சிப்பதையும் இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். 

மேலும் படிக்க | பூனையிடம் சிக்கிய பறவையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ! 

பிரவீன் கஸ்வானின் கூற்றுப்படி, இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை, ஆனால் இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்த அவர், விலங்குகளை இப்படி நடத்தக்கூடாது என்று ஆவேசமாக தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் வனவிலங்குகளைக் கையாளும் விதம் சரியல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக அவைகளும் உயிரினங்கள், கவனமாக இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

சிறுத்தையை டார்ச்சர் செய்யும் நபரின் வீடியோவை இங்கே காணவும்-

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ இதுவரை சுமார் 93 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அத்துடன் சிறுத்தையிடம் இதுபோன்று நடந்து கொண்டதை பார்த்து சமூக வலைதளவாசிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  அத்துடந் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? குட்டியை காக்க சூப்பரா யோசித்த அம்மா குரங்கின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News