எச்சரிக்கை! நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர் - வைரல் வீடியோ

Viral Video: சாலையில் வாகனத்தை ஓட்டி செல்லும் போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும். 

Written by - ZEE Bureau | Edited by - Shiva Murugesan | Last Updated : Sep 8, 2021, 03:57 PM IST
  • இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அவசியம்
  • நம் நாட்டில் சாலை விபத்து என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது.
  • ல்லட் பைக் இளைஞர் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
எச்சரிக்கை! நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர் - வைரல் வீடியோ

Viral Video: வாகனங்களை ஓட்டும் போது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.  நமது சிறிய கவனக்குறைவுக் கூட நமக்கு ஆபத்தாக முடியும். அதுவும் சில சமயம் மரணம் கூட ஏற்படலாம். எனவே இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும். சிகப்பு விளக்கு சிக்னலை மதிக்காமல் செல்வது, வேக கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றாமல் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மற்ற வாகனங்களை முந்திச்செல்வது, சாலையின் ஓரங்களிலுள்ள மரம், கற்கள், அறிவிப்பு பலகை போன்றவற்றை கவனிக்காமல் வாகனத்தை ஒட்டி சென்று விபத்துக்குள்ளாவது.

இதேபோன்ற ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் சாலையில் புல்லட் பைக் ஓட்டி வருகிறார். அவருக்கு முன்னால் செல்லும் காரை ஓவர் டேக் செய்து முந்திச்செல்ல நினைத்து, சாலை நடுவே இருக்கும் டிவைடரில் மோதி கீழே விழுகிறார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு முன் சென்ற காரின் சக்கரத்தில் சிக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அவரது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம். 

ட்விட்டரில் காட்டுவாசி என்பவர் தனது பக்கத்தில் இந்த காணொளியை பகிர்ந்துள்ளார். வீடியோ பார்க்க!

சாலையில் வாகனத்தை ஓட்டி செல்லும் போது வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும். 

ALSO READ | Viral Video: ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்

முன் செல்லும் வண்டியினை வாகன ஓட்டுநர்கள் முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டுநர் குறுக்கு சாலை அல்லது பாதாசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச் செல்ல வேண்டும். 

நம் நாட்டில் சாலை விபத்து என்பது நாம் தினம் தினம் பத்திரிக்கைகளில் படிக்கும் ஒரு சம்பவமாக இருந்து வருகிறது. சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும்.

ALSO READ | Viral Video: இதுபோன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News