ஹைதராபாத் போக்குவரத்து கான்ஸ்டபிள் ஜி. பாப்ஜி ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றுக்கு தடையாக இல்லாத வகையில் போக்குவரத்து நெரிசலை (Traffic) அகற்ற கிட்டத்தட்ட இரண்டு கி.மீ தூரம் ஓடியதையடுத்து பல தரப்புகளிலிருந்தும் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
அவர் ஆம்புலன்சிற்காக, ஓடி வாகனங்களை அகற்றும் வீடியோ வைரலாகி (Viral Video) ஆன்லைனில் அவர் இதயங்களை வென்று வருகிறார்.
இந்த சம்பவம் திங்களன்று ஆபிட்ஸ் ஜி.பி.ஓ சந்திப்பு மற்றும் ஆந்திரா வங்கி கோட்டிக்கு இடையிலான பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ள நேரத்தில் நடந்தது. இந்த வீடியோவை போலீசார் வெளியிட்டதையடுத்து இது புதன்கிழமை வெளிச்சத்திற்கு வந்தது.
HTP officer Babji of Abids Traffic PS clearing the way for ambulance..Well done..HTP in the service of citizens..@HYDTP pic.twitter.com/vFynLl7VVK
— Anil Kumar IPS (@AddlCPTrHyd) November 4, 2020
இந்த வீடியோவை ஆம்புலன்சில் (Ambulance) இருந்த ஒருவர் எடுத்ததாகத் தெரிகிறது. அந்த கான்ஸ்டபிள், ஜி.பி.ஓ சந்திப்பிலிருந்து கோட்டியை நோக்கி, ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் அதற்கு முன்னால் ஓடுவதைக் காண முடிகிறது. ஆம்புலன்சுக்கு தடை இல்லாதபடி அவர், வழியில் வரும் வாகனங்களை அகற்றிக்கொண்டே ஓடுவது வீடியோவில் தெரிகிறது.
ALSO READ: ஒரே நிமிடத்தில் 50 கார்ட்டூன்கள் அடையாளம்; கின்னஸ் சாதனை படைந்த நம்ம சென்னை பசங்க
ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு இலக்கை அடைய வெண்டும் என்ற குறிக்கோளில், தனது காவல் நிலையத்தின் எல்லைக்கு அப்பாலும் இந்த பணியை நிறுத்தாமல் செய்தார் அந்த கான்ஸ்டபிள்.
அபிட்ஸ் போக்குவரத்து காவல் நிலையத்துடன் (Traffic Police) இணைக்கப்பட்ட பாப்ஜியின் இந்த செயல் வாகன ஓட்டிகளால் பாராட்டப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தாலும், அவர்கள் அவருக்காக கைதட்டினர்.
கான்ஸ்டபிள், பொதுமக்களிடமிருந்து கிடைத்த பாராட்டு தனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது என்றார். "ஆம்புலன்ஸ் கடந்து செல்வதற்கான வழியை என்னால் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நோயாளி யார், எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை," என்று பாப்ஜி கூறினார்.
பாப்ஜி மூத்த அதிகாரிகளிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். "ஆபிட்ஸ் டிராஃபிக் பி.எஸ்ஸின் எச்.டி.பி அதிகாரி பாப்ஜி ஆம்புலன்சுக்கான வழியை க்ளியர் செய்கிறார்…. நல்ல பணியை செய்துள்ளீர்கள்… வாழ்த்துக்கள்…" என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) அனில் குமார் ட்வீட் செய்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், மும்பையில் ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் கார்களை நிறுத்தி, ஒரு தெரு நாய் சாலையைக் கடக்க வழிவகுத்தார்.
மற்றொரு மனதை நெகிழ வைக்கும் சம்பவத்தில், மும்பை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் சமீபத்தில் ஒரு பெண்ணால் பொது இடத்தில் அனைவர் முன்னிலையில் தாக்கப்பட்டார். அவர் அமைதியாக இருந்ததற்காகவும், தான் தாக்கப்பட்டபோதும், அதை மிகுந்த முதிர்ச்சியுடன் கையாண்டதற்காகவும் உதவி போலீஸ் கமிஷனர் (ACP) அவர்களால் பாராட்டப்பட்டார்.
தெற்கு மும்பையின் (Mumbai) கல்பாதேவி பகுதியில் ஹெல்மெட் அணியாமல் பில்லியன் சவாரி செய்த பெண்ணை நிறுத்தி கேள்வி கேட்டதற்காக ஏக்நாத் பார்த்தே அந்த பெண்ணால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ALSO READ: Kamala Harris-க்கு வாழ்த்து கூறி, கோலம் போட்டு, poster ஒட்டி வைரலாகும் தமிழக கிராமம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR