உரையை வாசிக்காமல் திக்கித் திணறிய அமைச்சர்: வைரல் வீடியோ

இன்று நாடு முழுவதும் 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் குடியரசு தின உரையை ஆட்சியரை வாசிக்க சொல்லி அமைச்சர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

Last Updated : Jan 26, 2019, 05:23 PM IST
உரையை வாசிக்காமல் திக்கித் திணறிய அமைச்சர்: வைரல் வீடியோ title=

இன்று நாடு முழுவதும் 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் குடியரசு தின உரையை ஆட்சியரை வாசிக்க சொல்லி அமைச்சர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இந்தியாவின் 70 வது குடியரசுத் தினத்தில் தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றினார். முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் ராஜபாதையில் அனைத்து மாநில அலங்கார வாகன ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் குடியரசு தின விழாவில் கொடியேற்றிய அமைச்சர் இமர்தி தேவி, குடியரசு தின உரையை முழுமையாக வாசிக்காமல் அதனை ஆட்சியர் வாசிப்பார் என்று கூறி பொறுப்பை தட்டிக் கழித்தது சர்ச்சையைக் கிளப்பியது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News