வானிலிருந்து பாய்ந்து வந்த கழுகு தண்ணீரில் நடத்திய மீன் வேட்டை: வைரல் வீடியோ

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 28, 2022, 05:41 PM IST
வானிலிருந்து பாய்ந்து வந்த கழுகு தண்ணீரில் நடத்திய மீன் வேட்டை: வைரல் வீடியோ title=

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், தற்போது கழுகு வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. கழுது ஒரு தோட்டாவைப் போல் பாய்ந்து வேட்டையாடும் காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். 

இந்த வீடியோ கழுகு ஒன்று, நடு வானில் இருந்து பறந்து வந்து வேட்டையாடுவதை பார்ப்பதால் வியப்பு மேலிடும். கழுகு தோட்டா பாயும்  வேகத்தில் கடலுக்குச் பாய்ந்து சென்று மீனைப் பிடித்தது. கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்பார்கள். அதை இந்த வீடியோ மீண்டும் நிரூபிக்கும் வகையில் இருக்கும். 

சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், கழுகு கடலுக்கு மேல் பறப்பதைக் காணலாம், அப்போது  அதன் கண்கள் தண்ணீரில் பல மீட்டர் கீழே தண்ணீரில் இருந்த மீன் மீது விழுந்தன. அடுத்த நொடியே, நாம் பார்க்கும் காட்சி நம்மை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்.  உண்மையில், இரையைப் பார்த்த கழுகு, தோட்டாவின் வேகத்தில் தண்ணீரில் பல அடிகள் கீழே  சென்று, நொடியில், மீனை தன் கால்களில் பிடித்துக் கொண்டு மேலே வந்தது. கழுகு எடை மிகுந்த மீனை சுமந்து கொண்டு காற்றில் பறந்ததைக் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!

வீடியோவை இங்கே பார்க்கலாம்:

மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News