இணைய தளம் என்பது தகவல்களை அள்ளித்தரும் களஞ்சியமாக மட்டுமில்லாமல், டென்ஷன் நிறைந்த நமது வாழ்க்கையை, லேசாக்கும் வகையில், மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் பலவிதமான தகவல்களையும் வீடியோக்களையும் ஆடியோக்களையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருக்கிறது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில், இவை நிச்சயம் நமது டென்ஷனை குறைத்து மனதை லேசாக்குகின்றன என்றால் மிகை இல்லை.
சமூக வலைதளத்தில், மிகவும் அபூர்வமான காட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலான பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இதற்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம் உண்டு. வேட்டை விலங்குகளின் சாதுரியமான வேட்டைகள் மூலம், காட்டு வாழ்க்கையில் உள்ள போராட்டங்களை புரிந்து கொள்ளலாம். வல்லவன் வாழ்வான் என்ற வகையில், சக்தி மிகுந்த விலங்குகள், பலவீனமான விலங்குகளை அடித்து ஒன்று வாழ்கின்றன.
சில சமயங்களில் இதில் விதிவிலக்குகளையும் பார்க்கலாம். வேட்டையாட வந்த விலங்கிடமிருந்து சாதுர்யமாக தப்பித்து, தன்னை உயிர் காத்துக் கொள்ளும் விலங்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. சில சமயங்களில், நாம் நினைத்து கூட பார்க்க முடியாத ஆச்சரியம் தரும் விஷயங்கள் நடப்பதையும் பார்க்கலாம். அந்த வகையில், மான் ஒன்று, பாம்பை சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும். மனிதர்கள் மட்டுமல்ல, சில விலங்குகள் கூட அதை விட்டு விலகியே இருக்கும். மான் மிகவும் சாதுவான பிராணி என்று அறியப்படுகிறது. மான் ஒரு அழகிய காட்டுவிலங்கு. மான்கள் பாலூட்டி இனத்தை சேர்ந்தது. இலை தாவரங்களை உண்டு வாழும் விலங்கினம். புல் தாவர வகைகளை உண்ணும் மான்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே மான் ஒன்று பாம்பை சாப்பிடும் வீடியோ இணையத்தையே அதிர்ச்சியில் நடத்தியுள்ளது.
மான் ஒன்று பாம்பை சாப்பிடும் வீடியோவை இங்கே காணலாம்:
Cameras are helping us understand Nature better.
Yes. Herbivorous animals do eat snakes at times. pic.twitter.com/DdHNenDKU0— Susanta Nanda (@susantananda3) June 11, 2023
வீடியோவில் மான் ஒன்று, பாம்பை ஏதும் நூடுல்ஸ் போல்ஸ் வைத்து சாப்பிடுகிறது. இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், மான்கள் சில சமயங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படும் போது, அல்லது அதற்கு சத்து குறைபாடு ஏற்படும் போது, மான் அசைவம் சாப்பிடும் என்று தெரிவிக்கின்றனர்.
காட்டுப்பகுதி வழியாக ஜிப் ஒன்றில் சென்று கொண்டிருக்கும் ஒருவர், இந்த அரிய காட்சியை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். பதிவிட்டதுமே இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகியது. இந்த மான் சைவ உணவிற்கும் அசைவ உணவிற்கும் இடையே வேறுபாடு அறியாமல் குழம்பி விட்டதோ என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். வேறு சிலர், இந்த மான் தாவரங்களை பற்றி சரியாக படிக்காமல் போனதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என வேடிக்கையாக பதிவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஃபேன் மேலே ஹாயா காத்து வாங்கும் பாம்பு.. செம்ம காமெடி வீடியோ
காணொளியில், காட்டுப் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டு, பாம்பை சுவைத்து சாப்பிடும் மானை காணலாம். வீடியோவை பதிவு செய்தவர், “என்னது மான் பாம்பு சாப்பிடுகிறதே?” என்று ஆச்சரியத்துடன் கேட்பதையும் கேட்கலாம். மான்களுக்கு பாஸ்பரஸ், உப்பு மற்றும் கால்சியம் போன்ற சில தாதுக்கள் பற்றாக்குறை இருந்தால், எப்போதாவது அது இறைச்சியை தேடலாம், குறிப்பாக குளிர்காலத்தில் தாவரங்கள் குறைவாக இருக்கும் போது இது நேரிடும் என நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் கூறியது. வைரலான வீடியோவுடன், "கேமராக்கள் இயற்கையை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆம், தாவரவகை விலங்குகள் சில சமயங்களில் பாம்புகளையும் உண்ணும்." என வேடிக்கையாக பதிவிடப்பட்டுள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ