Astonishing! நீரில் இருந்து உயரும் நிலம்! சும்மா அதிருது…

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப்போனார்கள், இப்படியொரு வினோதமான நிகழ்வு நிகழ பின்னணி என்ன என ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 24, 2021, 03:50 PM IST
Astonishing! நீரில் இருந்து உயரும் நிலம்! சும்மா அதிருது… title=

தற்போது ஒரு விநோதமான வீடியோப் பதிவு இணையத்தில் வைரலாகிறது. பார்ப்பவர்கள் அனைவரும் பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருந்தால், வீடியோவை படமாக்கியவரும் அதே பிரம்மிப்பில் தான் இருக்கிறார். அவர் வீடியோவை பதிவு செய்யும் போது பேசுவதை கேட்டால் தெரிகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப் போனார்கள், இப்படியொரு வினோதமான நிகழ்வு நிகழ பின்னணி என்ன என ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது?
 
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இது. திடீரென நிலத்தின் ஒரு பகுதி நதியின் மேல் உயர்கிறது. மழை பெய்த சற்று நேரத்தில் இப்படி அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இந்த விசித்திரமான வீடியோ ஹரியானா மாநிலத்தில் எடுக்கப்பட்டது.

யாரும் எதிர்பாராத விதமாக நிலம், ஆற்றில் இருந்து உயர்வதைக் கண்ட ஒருவர், உடனே அதை படமாக்கி, இணையத்தில் பதிவிட்டார். மொபைலில் பதிவு செய்யப்பட்ட வீடியோவின் பின்னணியில் சிலர் பேசிக் கொள்வதும் கேட்கிறது. ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டே வீடியோவை எடுக்கிறார் பதிவு செய்தவர். 

இதைப் பாருங்கள், நிலம் எவ்வாறு உயர்கிறது. புதிய அனுபவம் என்று அவர் ஹிந்தியில் சொல்கிறார். வீடியோவில், நீருக்கடியில் இருக்கும் நிலம் திடீரென தண்ணீருக்கு மேலே சில அடி உயர்ந்து பிறகு இடிந்து நொறுங்கி விழுவதைக் காணலாம்.

Also Read | Donkey Sawari: மழை வேண்டி கழுதை மீது உட்கார்ந்து ஊரைச்சுற்றி வந்த நாட்டாமை

முதலில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 61 பேர் வீடியோவை லைக் செய்து வைரலாக்கியுள்ளனர். நீங்கல் பார்க்கும்போது பார்த்தவர்களின் எண்ணிக்கை எத்தனை மில்லியன் எகிறியிருக்குமோ தெரியாது.

வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் திகைத்துப்போனார்கள், வினோதமான நிகழ்வு ஏன் நிகழ்ந்திருக்கலாம் என பலரும் பல கருத்துக்களை சொல்கின்றனர்.  

நிலத்தட்டுகள் அசைந்ததால் (tectonic activity) நிலம் உயர்ந்து இருக்கலாம் என்று சில பயனர்கள் தெரிவித்தனர். "உண்மையில் டெக்டோனிக் செயல்பாடு காரணமாக இப்படி ஆகவில்லை., ஆனால் பூமியில் உள்ள மீத்தேன், ஈரமான அடுக்கை ஒரு குமிழாக உருவாக்கி விடுவிக்கிறது, அதுதான் இங்கே நடக்கிறது என்று தோன்றுகிறது" என மற்றொரு பயனர் கூறுகிறார்.

Also Read | Viral Video: தாலி கட்டுவதற்கு முன்னால் மணமகனுக்கு நடந்த விபரீதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News