சிறுமிக்கு முத்தம் கொடுத்து, அரவணைக்கும் மலைப்பாம்பு - Watch

மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒரு சிறுமியை முத்தமிட்டு அவளை அரவணைக்கும் வீடியோ வைரலாகிறது!

Updated: Sep 16, 2019, 02:16 PM IST
சிறுமிக்கு முத்தம் கொடுத்து, அரவணைக்கும் மலைப்பாம்பு - Watch

மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒரு சிறுமியை முத்தமிட்டு அவளை அரவணைக்கும் வீடியோ வைரலாகிறது!

பாம்பு என்ற உச்சரிப்பு உண்மையில் மக்களிடையே எந்தவிதமான இனிமையான எண்ணங்களையும் வெளிப்படுத்தாது. இந்த ஊர்வன உயிரினம் பெரும்பாலும் பலரிடையே அச்சத்தைத் தூண்டுகின்றன. எல்லா பாம்புகளும் ஆபத்தானவை அல்ல; ஆனால், பல மக்கள் அவற்றை கண்டாலே பயத்திலும், அருவருப்பிலும் ஆள்கின்றனர். 

இந்நிலையில், ஒரு விளையாட்டுத்தனமான மலைப்பாம்பின் வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது. நீங்கள் பாம்புகளை முற்றிலும் விரும்பவில்லை என்றால்  இந்த வீடியோ உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். 

அந்த வீடியோவில் ஒரு மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒரு சிறுமியுடன் விளையாடுகிறது. உண்மையில் அவளுக்கு நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து, பின்னர் சிறுமிக்கு மேல் ஊர்ந்து செல்கிறது. இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும், பாம்புகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பதன் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு சில தீவிரமான எண்ணங்கள் உள்ளன.

உலகெங்கிலும் பாம்புகளை செல்லப்பிராணிகளாக பலர் வளர்த்து வருகின்றனர். ஆனால், இது ஒரு ஆபத்தான செயல் தான். வீடியோவில், வீட்டில் ஒரு பெரிய மஞ்சள் மலைப்பாம்பு கண்ணாடி மீது ஊர்ந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுமி அருகில் அவனது அமர சிறுமியின் நெற்றியிலும், கன்னத்திலும் முத்தம் கொடுக்கிறது. பின்னர்  சிறுமியை சுற்றி விளையாடுகிறது. அவள் சிரிக்கிறாள், அநேகமாக மாபெரும் ஊர்வனத்தால் கூச்சப்படுவதை உணர்கிறாள். இந்த வீடியோ நான்கு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 

அந்த வீடியோ காட்சி இதோ:-