இன்றைய ராசிபலன் 13 மே 2024: வாழ்க்கையில் திருப்புமுனையை சந்திக்கும் ராசி எது?

Horoscope for May 14: மே மாதம் 14ம் நாள் செவ்வாய்க்கிழமை ராசிபலன்... யாருக்கு அதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டும்? தெரிந்துக் கொள்வோம்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 14, 2024, 05:52 AM IST
  • மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள்
  • இன்றைய ராசிபலன் மே 4, 2024க்கான ஜோதிட கணிப்பு
  • வைகாசி மாதம் முதல் நாள் ராசிபலன்
இன்றைய ராசிபலன் 13 மே 2024: வாழ்க்கையில் திருப்புமுனையை சந்திக்கும் ராசி எது? title=

May 14 Rasipalan:  குரோதி ஆண்டு, வைகாசி மாதம் முதல் நாள், பூசம் நட்சத்திர நாளான இன்று யாருக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்

14-05-2024 குரோதி, வைகாசி 1, ராசி பலன்கள்

மேஷம் 
தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சமூகப் பணிகளில் அனுபவம் வெளிப்படும். மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும்.  

ரிஷபம் 
குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் வாய்ப்பு ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்.. அரசு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும்.  

மிதுனம் 
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

கடகம் 
குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாள்வீர்கள்.

சிம்மம் 
இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தக பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!

கன்னி 
வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். 

துலாம் 
அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். 

மேலும் படிக்க | சுக்கிரன் அஸ்தமனம்... நெருக்கடிகளை சந்திக்கும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்!

விருச்சிகம் 
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.  வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். 

தனுசு
புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். வீடு, வாகன தொடர்பான விரயங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு வெளிப்படும். 

மகரம்
நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். பழகும் விதங்களின் மூலம் ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.  

கும்பம் 
பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணம் மேம்படும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு சில மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.  

மீனம் 
பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செயல்படவும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் 13 மே 2024: இன்று ஜாக்பாட் அடிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News