அட்சய திருதியை 2024: உங்கள் ராசிப்படி என்ன பொருள் வாங்கலாம்

Akshaya Tritiya 2024: அட்சய திருதியை 2024 மே 10 கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மட்டுமில்லை, நெல், அரிசி போன்றவையும் வாங்கலாம். ஆனால் உங்கள் ராசிக்கு ஏற்ற படி என்ன பொருள் வாங்கினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 7, 2024, 02:04 PM IST
  • ராசியின்படி எந்த பொருட்களை வாங்கலாம்?
  • அட்சய திருதியை மே 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
அட்சய திருதியை 2024: உங்கள் ராசிப்படி என்ன பொருள் வாங்கலாம் title=

Akshaya Tritiya 2024: ஜோதிடத்தின் படி, அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீடு தானம் செய்வது மற்றும் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும். மேலும், அட்சய திருதியை திதியில், சுப காரியங்களை துவங்க ஏற்ற காலமாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற மே 10 ஆம் தேதி 2024, வெள்ளிக்கிழமை வருகிறது.இந்நாளில் நாள் நட்சத்திரம் பார்க்காமல் நாம் சுப காரியங்களை செய்யலாம் என்பது ஐதீகம். இந்நாளில் லட்சுமி தேவியையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் மனமகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாவிட்டால், அந்த நாளில் உங்கள் ராசிக்கு ஏற்றவாறு மற்ற உலோகங்களை வாங்கலாம். எனவே அட்சய திருதியை அன்று எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்கினால் ஐஸ்வர்யம் என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த அட்சய திருதியைக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்கினால் என்று பார்ப்போம்:

மேலும் படிக்க | சனி ஜெயந்தி... பாடாய் படுத்தும் ஏழரை சனியிடம் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்!

மேஷம் மற்றும் சிம்ம ராசி: 2024 அட்சய திருதியை அன்று, இந்த இரண்டு ராசிக்காரர்கள் தங்கம் மற்றும் செம்பு வாங்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார், இதனால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

ரிஷபம் மற்றும் கடக ராசி: இந்த இரண்டு ராசிக்காரர்களும் 2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்குவது நல்லது. இதைச் செய்வதன் மூலம், பணியிடத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம் மற்றும் கன்னி ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று (Akshaya Tritiya 2024) வெண்கல நகைகளை வாங்க வேண்டும். இவற்றில் தட்டு, லோட்டா போன்ற பாத்திரங்கள் அடங்கும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழில்-வியாபாரம் பெருகும்.

துலாம் மற்றும் விருச்சிக ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று தங்கத்திற்கு பதிலாக தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது நல்லது. இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் உண்டாகும்.

கும்பம் மற்றும் மகர ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை தினத்தன்று தங்கத்திற்கு பதிலாக இரும்பு பாத்திரங்கள் அல்லது இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனின் அருளைப் பெற்று மன அமைதி பெறுவீர்கள்.

தனுசு மற்றும் மீன ராசி: இந்த ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கலாம். இதைச் செய்வதன் மூலம், அவர்களின் தடைபட்ட வேலைகள் நிறைவேறும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News