சனி வக்கிர பெயர்ச்சி பலன்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. கிரகங்களின் மாற்றம், அவற்றின் நேரடி இயக்கம் அல்லது பிற்போக்கு இயக்கம் காரணமாக ராசிகள் பாதிக்கப்படுகின்றன. அதேபோல சனியின் பிற்போக்கு சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும்.
சனி பகவான் ஒருவரது கர்மாவின் அடிப்படையில் பலன்களை அளிக்கும் கிரகம் ஆவார். அவர் ஜூன் 5 முதல் எதிர் திசையில் சஞ்சரிக்கிறார். பிற்போக்கான சனி இனி 141 நாட்களுக்குப் பிறகு தனது இயக்கத்தை மாற்றுவார். இந்து நாட்காட்டியின்படி, 23 அக்டோபர் 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09:37 மணிக்கு சனி தனது இயக்கத்தை மாற்றுவார். அதாவது சனி மீண்டும் தன் நேரடி இயக்கத்தைத் தொடங்குவார்.
சனியின் வக்கிர சஞ்சாரத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் சனியின் பிற்போக்கு சஞ்சாரத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்த நேரத்தில், நீங்கள் பணிகளில் வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் வேலை செய்யுங்கள். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
குடும்ப உறுப்பினர்களுடன் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க | மகாலட்சுமி யோகத்தால் இந்த ராசிகளின் செல்வமும் செழிப்பும் பெருகும்
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் பிற்போக்கு சனி உங்கள் நம்பிக்கையை தகர்த்துவிடும். உங்கள் தொழிலில் கவனமாக இருங்கள். இந்த நேரத்தில் நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
பணியிடத்திலும், வியாபாரத்திலும் அதிகப்படியான கவனம் தேவை. இந்த காலத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
சனியின் தலைகீழ் சஞ்சாரத்தின் தாக்கம் கன்னி ராசிக்காரர்களிடம் காணப்படும். தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும்.
மகரம்:
பிற்போக்கு சனியின் கலவையான பலனை மகர ராசிக்காரர்களில் காணலாம். சனி பகவான் மகர ராசியின் அதிபதியாக உள்ளார். இருப்பினும், உங்கள் செயல்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
சனியின் தலைகீழ் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். சனியின் தோஷங்களைத் தவிர்க்க, சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு கறுப்பு எள்ளும் எண்ணெய்யும் கொண்டு அபிஷேக அர்ச்சனை செய்யலாம்.
கும்பம்:
சனியின் பிற்போக்கு இயக்கத்தின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களிடமும் காணப்படும். இந்த நேரத்தில் நீங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். சனிக்கிழமையன்று நீராடிவிட்டு, சனி பகவானின் கோவிலில் வழிபடுவது நன்மை தரும்.
மேலும் படிக்க | Vakri Shani Gochar 2022: சனீஸ்வரரின் வக்ர சஞ்சாரத்தில் பணமழையில் நனையும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR